2018-06-28 16:10:00

நீச்சல், மனவலிமை, கட்டுப்பாட்டைச் சொல்லித் தருகின்றது


ஜூன்.28,2018. ஏனைய விளையாட்டுகளைப் போல், நீச்சலும் மனித உடலின் நலனைப் பாதுகாப்பதோடு, மனவலிமையையும், கட்டுப்பாட்டையும் சொல்லித்தருகின்றது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த நீச்சல் வீரர்களிடம் கூறினார்.

"Sette Colli" அதாவது, 'ஏழு குன்றுகள்' என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு பரிசைப் பெறுவதற்கு தங்களையே தயாரித்து வரும் நீச்சல் வீரர்களையும், அவர்களது பயிற்சியாளர்களையும் வத்திக்கான் கிளமெந்தீனா அரங்கத்தில், இவ்வியாழன் காலை சந்தித்தத் திருத்தந்தை, அக்குழுவினருக்கு தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

தனிப்பட்டத் திறமைகளை வளர்ப்பதற்கு உதவியாக இருக்கும் நீச்சல், குழுவுடன் இணைந்து செயலாற்றும் பயிற்சியையும் வழங்குகிறது என்பதை தன் உரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, "Synchronized Swimming" அதாவது ஒருங்கிணைந்த நீச்சல் என்ற விளையாட்டில், குழுவில் செயல்படுவது மிக தெளிவாக வெளிப்படுகிறது என்பதைக் குறிப்பிட்டார்.

"Synchronized Swimming" என்ற விளையாட்டில் சில நாட்களுக்கு முன் நொயேமி என்ற இளம்பெண்ணை தன் உரையில் சிறப்பாகக் குறிப்பிட்டு, அவருக்காகவும், அவரது குடும்பத்திற்காகவும் தான் செபித்து வருவதாகத் தெரிவித்தார்.

ஏழு குன்றுகளால் சூழப்பட்டது உரோம் நகரம் என்பதை நினைவுறுத்தும் வண்ணம் உருவாக்கபட்டுள்ள "Sette Colli" நீச்சல் குழுவில் பங்கேற்கும் இத்தாலிய மற்றும் பிற நாட்டு வீரர்கள் 300க்கும் அதிகமானோர் திருத்தந்தையைச் சந்தித்தனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.