சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருஅவை \ இந்தியா, இலங்கை

பாட்னா உயர்மறைமாவட்டத்திற்கு புதிய வாரிசு ஆயர்

பாட்னா உயர்மறைமாவட்டத்தின் புதிய வாரிசு ஆயர் செபஸ்டியான் கல்லுப்புரா - RV

29/06/2018 15:41

ஜூன்,29,2018. இந்தியாவின் பாட்னா உயர்மறைமாவட்டத்திற்கு, பக்சர் மறைமாவட்ட ஆயர் செபஸ்டியான் கல்லுப்புரா (Sebastian Kallupura) அவர்களை, வாரிசு ஆயராக, இவ்வெள்ளிக்கிழமையன்று நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

1953ம் ஆண்டு ஜூலை 14ம் தேதி, கேரளாவின் கொட்டியூரில்(Kottiyoor) பிறந்த ஆயர்  செபஸ்டியான் கல்லுப்புரா அவர்கள், பாட்னா உயர்மறைமாவட்டத்திற்காக, 1984ம் ஆண்டில் அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். பாட்னா உயர்மறைமாவட்டத்தில் முக்கிய பொறுப்புக்களை வகித்த இவர், 2009ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதியன்று, பக்சர் மறைமாவட்ட ஆயராக நியமிக்கப்பட்டார்.

பாட்னா உயர்மறைமாவட்டத்தின் தற்போதைய பேராயராக, இயேசு சபையின் பேராயர் வில்லியம் டி சூசா அவர்கள், 2007ம் ஆண்டிலிருந்து பணியாற்றி வருகிறார். இவர் 1946ம் ஆண்டு மார்ச் 5ம் நாளன்று பிறந்தவர்.

பீஹார் மாநிலத்திலுள்ள பாட்னா உயர்மறைமாவட்டத்தின்கீழ், Bettiah, Bhagalpu, Buxar,    Muzaffarpur, Purnea ஆகிய மறைமாவட்டங்கள் உள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

29/06/2018 15:41