சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ நிகழ்வுகள்

திருத்தந்தை, பொலிவிய அரசுத்தலைவர் Evo Morales சந்திப்பு

திருத்தந்தை, பொலிவிய அரசுத்தலைவர் Evo Morales சந்திப்பு

30/06/2018 15:16

ஜூன்,30,2018. பொலிவியா நாட்டு அரசுத்தலைவர் Juan Evo Morales Ayma அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இச்சனிக்கிழமை காலையில் திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இச்சந்திப்புக்குப் பின்னர், திருப்பீட செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட பன்னாட்டு உறவுகள் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் ஆகிய இருவரையும் சந்தித்துப் பேசினார், பொலிவிய அரசுத்தலைவர் Evo Morales.

பொலிவியாவுக்கும், திருப்பீடத்திற்கும் இடையே, குறிப்பாக, இவ்விரு தரப்புக்கும் இடையே தற்போது நிலவும் நல்லுறவுகள், பொலிவியா நாடு அமைந்துள்ள பகுதியின் தற்போதைய நிலவரம் போன்றவை இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன என்று, திருப்பீட தகவல் தொடர்பகம் கூறியது.

தென் அமெரிக்காவில், மத்திய மற்றும் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பொலிவியா, நான்கு பக்கங்களிலும் நிலப்பகுதியால் சூழப்பட்டுள்ளது. நாட்டின் மூன்றில் ஒரு பகுதி, ஆன்டியன் மலைப்பகுதியில் அமைந்துள்ளது. தென் அமெரிக்காவில் ஐந்தாவது மற்றும் உலகில் 27வது பெரிய நாடாக, பொலிவியா அமைந்துள்ளது.

மேலும், ஆயர்கள் பேராயத் தலைவர் கர்தினால் Marc Ouellet அவர்களும், இச்சனிக்கிழமை காலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

30/06/2018 15:16