சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

உலகம் \ அறிந்து கொள்வோம்

உருவாகிவரும் நிலையில் புதிய கோளம் கண்டுபிடிப்பு

உருவாகிவரும் நிலையில் புதிய கோளம் கண்டுபிடிப்பு - RV

04/07/2018 16:07

ஜூலை,04,2018. ஒரு விண்மீனைச் சுற்றி வாயு மற்றும் தூசுகளால் உருவாகிவரும் புதிய கோளத்தை வானியலாளர்கள் படமெடுத்துள்ளனர்.

இதுபோன்ற உருவாக்க நிலையிலுள்ள கோளத்தை ஆய்வாளர்கள் பல ஆண்டுகளாக தேடி வரும் நிலையில், முதல் முறையாக இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிடிஎஸ் 70 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்மீனுக்கு, 1 கோடிக்கும் குறைவான வயதே இருக்குமென்றும், மேலும் இதன் துணைக்கோளின் வயது 50 முதல் 60 இலட்சம் வயதே இருக்குமென்றும் தெரியவந்துள்ளது.

பிடிஎஸ் 70பி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்மீன், வியாழனைவிட பல மடங்கு பெரியதாக இருக்குமென்றும், மேலும் அது மேகமூட்டமான வளிமண்டலத்தைக் கொண்டிருக்கலாம் என்றும் தெரிகிறது.

யுரேனஸ் கோளம் சூரியனை சுற்றிவரும் தூரத்தை போன்று இந்த கோளும் அதன் விண்மீனைச் சுற்றிவருமென்று ஜெர்மன் நாட்டு மாக்ஸ் பிளாங்க் வான்வெளி மையத்தின் ஆய்வாளர்கள் குழு கண்டறிந்துள்ளது.

நமது சூரிய குடும்பத்திலுள்ள எல்லா கோள்களைவிட அதிகமாக, அதாவது, இதன் மேற்பரப்பு வெப்பநிலை 1,000 செல்ஸியஸை தாண்டும் என்று கருதப்படுகிறது.

ஆதாரம் : பிபிசி / வத்திக்கான் செய்திகள்

04/07/2018 16:07