சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ நிகழ்வுகள்

திருப்பீட சமூகத் தொடர்புத் துறையின் புதியத் தலைவர்

திருத்தந்தையால் நியமனம் பெற்றுள்ள திருப்பீட சமூகத் தொடர்புத் துறையின் புதியத் தலைவர் பவுலோ ருபீனி - RV

05/07/2018 15:32

ஜூலை,05,2018. திருப்பீட சமூகத் தொடர்புத் துறையின் தலைவராக முனைவர் பவுலோ ருபீனி (Paolo Ruffini) அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஜூலை 5 இவ்வியாழனன்று நியமனம் செய்தார்.

இத்தாலிய ஆயர் பேரவையின் TV 2000 என்ற தொலைகாட்சி நிறுவனத்தின் இயக்குனராகப் பணியாற்றிவந்த ருபீனி அவர்கள், கடந்த 40 ஆண்டளவாக ஊடகத் துறையில் பணியாற்றிவருபவர்.

1956ம் ஆண்டு இத்தாலியின் சிசிலித் தீவில், பலெர்மோ என்ற ஊரில் பிறந்த ருபீனி அவர்கள், உரோம் நகரின் 'லா சாப்பியன்சா' பல்கலைக்கழகத்தில் தன் பட்டப்படிப்பை நிறைவு செய்தார்.

தன் 23வது வயதுமுதல் ஊடகத் துறையில் பணியாற்றிவந்துள்ள ருபீனி அவர்கள், இதழியல் தொடர்பான பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

திருப்பீட சமூகத் தொடர்புத் துறையின் தலைவராக பொறுப்பேற்பதன் வழியாக, முனைவர் பவுலோ ருபீனி அவர்கள், ஒரு திருப்பீடத் துறையின் தலைவராக நியமனம் பெறும் முதல் பொதுநிலையினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் செய்திகள்

05/07/2018 15:32