சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ நிகழ்வுகள்

புலம்பெயர்ந்தோருக்கென சிறப்பு திருப்பலியாற்றும் திருத்தந்தை

இலாம்பதூசா தீவில் புலம்பெயர்ந்தோரைச் சந்திக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் - AFP

05/07/2018 15:42

ஜூலை,05,2018. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை 5 இவ்வியாழனன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தி, ஒரு கேள்வி வடிவில் அமைந்திருந்தது.

"நமது உள்ளங்களை அமைதிப்படுத்தி, இறைவனின் குரலைக் கேட்க நாம் அறிந்துள்ளோமா?" என்ற கேள்வியை, திருத்தந்தை தன் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டார்.

மேலும், ஜூலை 6 இவ்வெள்ளியன்று காலை 11 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் புலம்பெயர்ந்தோருக்கென ஒரு சிறப்பு திருப்பலியை நிறைவேற்றுவார் என்று வத்திக்கான் செய்தித் தொடர்பக இயக்குனர் கிரேக் புர்கே அவர்கள் அறிவித்துள்ளார்.

2013ம் ஆண்டு ஜூலை 8ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலியின் இலாம்பதூசா தீவுக்குச் சென்று அங்கிருந்த புலம்பெயர்ந்தோரைச் சந்தித்த நிகழ்வின் 5ம் ஆண்டு நினைவாக, இத்திருப்பலி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தனிப்பட்ட முறையில் அழைப்பு பெற்றுள்ள புலம்பெயர்ந்தோரும் அவர்களுக்குப் பணியாற்றுவோரும் என 200 பேர் இத்திருப்பலியில் கலந்துகொள்கின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் செய்திகள்

05/07/2018 15:42