சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருஅவை \ ஆசியா

மனிலா Genfest விழாவில் 100க்கு மேற்பட்ட நாடுகளின் இளையோர்

Genfest கொண்டாட்டம் - RV

06/07/2018 16:56

ஜூலை,06,2018. Genfest எனப்படும், ஃபோக்கோலாரே இயக்கத்தின் உலகளாவிய இளையோர் விழா, பிலிப்பைன்ஸ் நாட்டின் மனிலாவில், ஜூலை 6, இவ்வெள்ளியன்று தொடங்கியுள்ளது. 

ஜூலை 08, வருகிற ஞாயிறு வரை நடைபெறும், இந்த இளையோர் விழாவில், நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளிலிருந்து ஏறத்தாழ ஆறாயிரம் இளையோர் கலந்துகொள்கின்றனர்.

மனிலாவில் நடைபெற்றுவரும் இந்த விழா, ஆசியா மற்றும், ஐரோப்பாவுக்கு வெளியே இடம்பெறுவது இதுவே முதன்முறையாகும்.

“அனைத்து எல்லைகளையும் கடந்து” என்ற தலைப்பில், மனிலாவில் நடைபெற்று வரும் 11வது Genfest இளையோர் விழா, பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மரபுகளை இளையோர் அனுபவிக்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கின்றது என்று கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் செய்திகள்

06/07/2018 16:56