2018-07-06 16:19:00

பொதுநிலை இறைஊழியர்களின் வீரத்துவ வாழ்வுமுறை ஏற்பு


ஜூலை,06,2018. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளிக்கிழமையன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நற்செய்திக்காகச் சித்ரவதைப்படுத்தப்படும் ஏராளமான நம் சகோதரர், சகோதரிகள் எதிர்நோக்கும் துன்பங்கள், கிறிஸ்தவர்களாகிய நாம், இன்னும் அதிகமாக ஒன்றித்திருக்க வேண்டுமென்பதை நினைவுபடுத்துவதாய் உள்ளன என்று கூறியுள்ளார்.

மேலும், Pietro Di Vitale, Giorgio La Pira, Alexia González-Barros y González, Carlo Acutis ஆகிய நான்கு இறைஊழியர்களின் வீரத்துவப் புண்ணியப் பண்புகளை, இவ்வியாழனன்று (ஜூலை, 05) ஏற்றுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலி, இஸ்பெயின், பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்த நான்கு இறைஊழியர்களும் பொதுநிலை விசுவாசிகள் ஆவர்.

இத்தாலியின் சிசிலித் தீவிலுள்ள Castronovoவில், 1916ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி பிறந்த,  Pietro Di Vitale அவர்கள், 1977ம் ஆண்டு சனவரி 29ம் நாளன்று காலமானார்.

இத்தாலியின் Pozzalloவில், 1904ம் ஆண்டு சனவரி 9ம் தேதி பிறந்த Giorgio La Pira அவர்கள், 1977ம் ஆண்டு நவம்பர் 5ம் பிளாரன்ஸ் நகரில் காலமானார்.

இஸ்பெயின் நாட்டின் மத்ரித் நகரில், 1971ம் ஆண்டு மார்ச் 7ம் தேதி பிறந்த Alexia González-Barros y González அவர்கள், 1985ம் ஆண்டு டிசம்பர் 5ம் நாளன்று Pamplonaவில் காலமானார்.

பிரிட்டனின் இலண்டனில், 1991ம் ஆண்டு மே 3ம் தேதி பிறந்த  Carlo Acutis  அவர்கள், 2006ம் ஆண்டு அக்டோபர் 12ம் நாளன்று, இத்தாலியின் மோன்சாவில் காலமானார்.

ஆதாரம் : வத்திக்கான் செய்திகள்








All the contents on this site are copyrighted ©.