2018-07-14 16:14:00

இமயமாகும் இளமை – உலகின் இளம் கோடீஸ்வரர்க்கு வயது 21


2017ம் ஆண்டுக்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலை ஹரன் குளோபல் (HARAN GLOBAL) நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் 68 நாடுகளைச் சேர்ந்த 2,694 கோடிஸ்வரர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் நார்வே நாட்டைச் சேர்ந்த, 21 வயது நிரம்பிய அலெக்சாண்ட்ரா ஆண்ட்ரெசன் (Alexandra Andresen) என்பவர், உலகின் மிக இளம் வயதுடைய பணக்காரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இவர், நார்வேயின் ஆஸ்லோவில், 1996ம் ஆண்டில் பிறந்தவர். இந்த இளம்பெண்ணின் சொத்து மதிப்பு ஏறத்தாழ 130 கோடி அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.8000 கோடிக்கு மேல்). கடந்த 2007ம் ஆண்டு அவரது தந்தையின் முதலீட்டு நிறுவனத்தில் இருந்து 42 விழுக்காட்டுப் பங்குகள் இவருக்கு கிடைத்துள்ளன. அதை வைத்து இவர் தொழில் செய்து, பில்லியனர் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார். மேலும், இந்த ஆண்டுக்கான உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில், புதிதாக 437 பில்லியனர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில், முதல் தலைமுறையாக பில்லியனர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள, Stripe நிறுவனத்தை ஆரம்பித்தவர்களில் ஒருவரும், அதன் தலைவருமான 27 வயது நிரம்பிய John Collison அவர்கள், தன்னுடைய சொந்த உழைப்பில் 12 பில்லியன் டாலர்கள் சம்பாதித்துள்ளார். சுயமாகவே சம்பாதித்து இப்பட்டியலில் இடம்பிடித்துள்ள இளம் பணக்காரரான John Collison அவர்கள், 1990ம் ஆண்டு அயர்லாந்து நாட்டின் Limerick என்ற ஊரில் பிறந்தவர். மேலும் இப்பட்டியலில் 170 இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அவர்களில் 56 பேர் புதிதாக இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். இவர்களில் 14 பேர் பெண்கள். உலகிலேயே அதிக பணக்காரர்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது.

ஆதாரம் : தினமலர்/வத்திக்கான் செய்திகள்








All the contents on this site are copyrighted ©.