2018-07-17 16:45:00

மக்களுக்காக, ஈராக் திருஅவையின் பாதுகாப்பு நடவடிக்கைகள்


ஜூலை,17,2018. வேலைவாய்ப்பின்மைகளுக்கும் ஏழ்மைக்கும் எதிராக ஈராக்கின் பாஸ்ரா பகுதியில் கடந்த ஒரு வாரமாக இடம்பெற்றுவரும் போராட்டங்களையொட்டி, தன் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துள்ளது தல திருஅவை.

குறைந்தபட்சம் 8 பேரின் உயிரிழப்புகளுக்கும், 56 பேரின் காயமடைதலுக்கும் காரணமான போராட்டங்களையொட்டி, தன் கலாச்சார நடவடிக்கைகளையும் மறைக்கல்வி வகுப்புக்களையும் நிறுத்தி வைத்துள்ள தலத்திருஅவை, திருப்பலிகளையும், வழிபாட்டுக் கொண்டாட்டங்களையும் மட்டும் தொடர்ந்து வருகிறது.

ஒரு வாரமாக, ஈராக்கின் தென்பகுதியில் இடம்பெறும் இரத்தம் தோய்ந்த போராட்டங்களிலிருந்து பொது மக்களை காப்பாற்றும் நோக்கத்தில், திருப்பலிகளையும், திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களையும் தவிர ஏனைய அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவித்த Basraவின் கல்தேய வழிபாட்டுமுறை பேராயர் Alnaufali Habib Jajou அவர்கள், இலஞ்ச ஊழல், மற்றும், தவறான ஆட்சிக்கு எதிராக இந்த போராட்டங்கள் இடம்பெறுவதாகத் தெரிவித்தார்.

போராட்டங்கள் இடம்பெறும் தென்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை அறிவித்துள்ளது, ஈராக் அரசு.

ஆதாரம் : வத்திக்கான் செய்திகள்








All the contents on this site are copyrighted ©.