சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ எழுத்து வடிவில்

திருத்தந்தையின் டுவிட்டர், இன்ஸ்டகிராம் பகிர்வுகள்

திருத்தந்தையின் இன்ஸ்டகிராம் பகிர்வை, கைப்பேசியில் பார்க்கும் நபர். - AFP

18/07/2018 15:01

ஜூலை,18,2018. "நாம் வாழும் ஒவ்வொருநாள் சூழலிலும், அனைவரோடும் இணைந்து அன்பு கலாச்சாரத்தைக் கட்டியெழுப்ப இயேசு நம்மை அழைக்கிறார்" என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை 18 இப்புதனன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியாக அமைந்தது.

ஒவ்வொரு நாளும் @pontifex என்ற வலைத்தள முகவரியில் திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, இலத்தீன் மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகின்றன.

இத்துடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தூதுப் பயணங்களை மேற்கொள்ளும் வேளையில், அந்தந்த நாட்டில் பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ மொழியிலும் தன் டுவிட்டர் செய்திகளை வெளியிட்டு வருகிறார்.

ஜூலை 18, இப்புதன் முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 1,633 என்பதும், அவரது செய்திகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 78 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

இத்துடன், @franciscus என்ற பெயரில் இயங்கிவரும் instagram முகவரியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செயல்பாடுகளை மையப்படுத்தி, அவ்வப்போது வெளியிடப்பட்டு வரும் படங்கள் மற்றும் காணொளிகள், இதுவரை 572 என்பதும், அவற்றைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை 56 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

ஆதாரம் : வத்திக்கான் செய்திகள்

18/07/2018 15:01