முகப்பு பக்கம் > கிறிஸ்தவ ஒன்றிப்பு > 2012-06-15 16:02:33
A+A-print this page

ஆஸ்திரேலியாவில் புதிய ordinariate


ஜூன்15,2012. ஆங்லிக்கன் சபையிலிருந்து கத்தோலிக்கத் திருஅவையில் சேரும் உறுப்பினர்களுக்கென ordinariate எனப்படும் புதிய திருஆட்சி அமைப்பை இவ்வெள்ளியன்று ஆஸ்திரேலியாவில் உருவாக்கியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
Personal Ordinariate of Our Lady of the Southern Cross என அழைக்கப்படும் இப்புதிய திருஆட்சி அமைப்பின் தலைவராக, பாரம்பரிய ஆங்கிலிக்கன் சபையின் முன்னாள் ஆயர் Harry Entwistle என்பவரை நியமித்துள்ளார் திருத்தந்தை.
இத்தகைய திருஆட்சி அமைப்புகள் இங்கிலாந்திலும், அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளன.
ஆங்லிக்கன் சபையின் பாரம்பரியக் கூறுகளைக் கடைப்பிடித்துக்கொண்டு கத்தோலிக்கத் திருஅவையில் முழுவதும் இணைந்து வாழ விரும்புவோர்க்கெனத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இத்தகைய திருஆட்சி அமைப்புகளை உருவாக்கி வருகிறார்.
ஆஸ்திரேலியாவில் உருவாக்கப்பட்டுள்ள இப்புதிய ordinariateன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள Harry Entwistle என்பவர் கத்தோலிக்கத் திருஅவையில் இவ்வெள்ளியன்று குருவாகவும் திருநிலைப்படுத்தப்பட்டார்.



பகிர்ந்து






நாங்கள் யார் நிகழ்ச்சிகள் நேரம் வானொலி மையத்திற்கு எழுது வத்திக்கான் வானொலியின் தயாரிப்புகள் இணைப்புகள் பிற மொழிகள் தி௫ப்பீடம் வத்திக்கான் நகரம் தி௫த்தந்தை நிகழ்த்தும் தி௫வழிபாடுகள்
All the contents on this site are copyrighted ©. Webmaster / இணைய அமைப்பாளர்கள் / சட்ட விதிமுறை / விளம்பரம்