சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:
வத்திக்கான் வானொலி

முகப்பு பக்கம் / வார ஒலிபரப்பு / முதல் நிமிடம்

கடுகு சிறுத்தாலும் – ‘கிரிக்கெட்’டின் பக்க விளைவுகள்


தன்னைக் காண வந்த நண்பரைக் கண்டதும், மருத்துவர் அதிர்ச்சி அடைந்தார். நண்பரின் இரு காதுகளிலும் தீக்காயங்கள். என்ன நடந்ததென்று கேட்ட மருத்துவரிடம்,  நண்பர் வீட்டில் நடந்ததைச் சொன்னார்: "டாக்டர், நான் ‘கிரிக்கெட் மேட்ச்’ பார்ப்பதில் முற்றிலும் மூழ்கிப் போயிருந்தேன். என் மனைவி தன் புடவையை 'அயர்ன்' செய்து கொண்டிருந்தார். திடீரென அடுப்படியில் எதையோ செய்வதற்கு அவசரமாகச் சென்றவர், 'அயர்ன் பாக்ஸை', 'டெலிபோனுக்கு' அருகில் வைத்துவிட்டுச் சென்றார்" என்று நண்பர் கதையை ஆரம்பித்தார். "உங்கள் காது எப்படி காயப்பட்டது? அதைச் சொல்லுங்கள்" என்று மருத்துவர் துரிதப்படுத்தினார். "அந்த நேரம் பார்த்து, 'டெலிபோன்' மணி அடித்தது. நான் கிரிக்கெட் பார்க்கும் மும்முரத்தில், 'டெலிபோனு'க்குப் பதில், 'அயர்ன் பாக்ஸை' எடுத்து காதில் வைத்துவிட்டேன்" என்று சொன்னார் நண்பர். "சரி, எப்படி இரண்டு காதிலும் தீக்காயம் வந்தது?" என்று மருத்துவர் கேட்டபோது, "அதை ஏன் கேட்கிறீர்கள்? நான் 'அயர்ன் பாக்ஸை' கீழேவைத்த அடுத்த நிமிடமே, மீண்டும் 'டெலிபோன்' மணி அடித்தது" என்று நண்பர், தனக்கு நேர்ந்த விபத்தை விளக்கிக் கூறினார்.

கிரிக்கெட் விளையாட்டின் பக்க விளைவுகள், ஏராளம்! ஏராளம்!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி