சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:
வத்திக்கான் வானொலி

முகப்பு பக்கம் / உலகம் / அறிந்து கொள்வோம்

உலக அளவில் முகநூல் பயன்படுத்துவோரில் இந்தியா 2வது இடம்


ஜூலை,01,2015. உலக அளவில் முகநூல் பயன்படுத்துவோர் அதிகம் உள்ள நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா 2வது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் கைபேசி மூலம் முகநூலைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. தற்போது முகநூல் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 12 கோடியே 50 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. 

இந்தியாவில் 3ஜி சேவை பல இடங்களில் கிடைத்தாலும், 80 விழுக்காடு கைபேசி வாடிக்கையாளர்கள் 2ஜி சேவையையே பயன்படுத்தி வருகின்றனர். கைபேசியில் 2ஜி இணையதள சேவையிலும் முகநூலை எளிதாகப் பயன்படுத்தும் முகநூல் லைட் ஆப் அறிமுகப்படுத்தப்பட்டது, இந்த எண்ணிக்கை அதிகரிக்க முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

2015ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, உலகளவில் தொடர்ந்து ஒரு மாதமாகப் முகநூல் பயன்படுத்தியவர்கள் 144 கோடிப் பேர் எனக் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : தினமணி / வத்திக்கான் வானொலி