சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:
வத்திக்கான் வானொலி

முகப்பு பக்கம் / திருஅவை / உலகம்

அருளாளர்களின் பரிந்துரைகளால் நடந்த புதுமைகள் ஏற்பு


மே,10,2016. முத்திப்பேறு பெற்ற இருவரின் பரிந்துரைகளால் நடந்த புதுமைகள் மற்றும் ஒருவரின் வீரத்துவமான பண்புகளை இத்திங்களன்று அங்கீகரித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அமலமரி குழந்தைகள் சபையை நிறுவிய அருளாளர் அருள்பணியாளர் Ludovico Pavoni, கிறிஸ்தவப் பள்ளிகள் சகோதரர் சபையின் அருளாளர் Salomone Leclercq ஆகிய இருவரின் பரிந்துரைகளால் நடந்த புதுமைகளை ஏற்றுள்ளார் திருத்தந்தை.

மேலும், இறையடியார் அருள்பணியாளர் Raffaele Emanuele Almansa Riaño அவர்களின் வீரத்துவமான பண்புகளையும் அங்கீகரித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். 1840ம் ஆண்டு பிறந்து, 1927ம் ஆண்டில் இறந்த அருள்பணியாளர் Riaño அவர்கள், பிரான்சிஸ்கன் சபையில் வார்த்தைப்பாடுகளை எடுத்தவர்.

அருள்பணியாளர் Ludovico Pavoni, 1784ம் ஆண்டு பிறந்து 1849ம் ஆண்டில் இறந்தவர். அருள்சகோதரர் Salomone Leclercq, 1745ம் ஆண்டு பிறந்து 1792ம் ஆண்டில் இறந்தவர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி