சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:
வத்திக்கான் வானொலி

முகப்பு பக்கம் / திருஅவை / உலகம்

அமெரிக்கக் கண்டத்தின் யூபிலி ஆண்டு கொண்டாட்டம்


ஆக.,22,2016.  இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகளுக்கான இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு கொண்டாட்டங்கள் இம்மாதம் 27 முதல் 30ம் தேதி வரை கொலம்பிய தலைநகரில் இடம்பெற உள்ளன.

அமெரிக்க கண்டத்தின் அனைத்து திரு அவைகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ள உள்ள இந்த கொண்டாட்டங்களை, இலத்தீன் அமெரிக்காவிற்கான திருப்பீட அவையும், இலத்தீன் அமெரிக்க ஆயர் பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

அமெரிக்க கண்டத்தின் மறைபரப்புப் பணிகளுக்கு ஓர் ஊக்கத்தை வழங்கும் நோக்குடன், இந்த அருளின் ஆண்டில் இந்த 4 நாள் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க கண்டத்தில் இரக்கத்தின் சாட்சிகளாக செயல்பட்ட புனிதர்களுக்கு அர்ப்பணிக்கும் விதமாகவும் இந்த கொண்டாட்டங்கள் ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளன.

ஆதாரம் :  Fides / வத்திக்கான் வானொலி