சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:
வத்திக்கான் வானொலி

முகப்பு பக்கம் / உலகம் / சுற்றுச்சூழல்

காற்று மாசுக்கேட்டினால் ஒவ்வோர் ஆண்டும் 65 இலட்சம் மரணம்


செப்.28,2016. காற்று மாசுக்கேட்டின் விளைவால் ஒவ்வோர் ஆண்டும் 65 இலட்சம் மக்கள் இறக்கின்றனர் என்று, ஐ.நா.வின் உலக நலவாழ்வு நிறுவனமான WHO இச்செவ்வாயன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இவ்விதம் இறப்போரில், காற்று மாசுக்கேடு மிக அதிகம் உள்ள நாடுகளில் இறப்போரின் எண்ணிக்கை, 92 விழுக்காடு என்றும், இந்தக் குறைப்பாட்டை விரைவில் தீர்ப்பது அவசியம் என்றும், இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வருமானம் குறைந்த சமுதாயத்தில் வாழ்வோரே, காற்று மாசுக்கேட்டினால் அதிகம் பாதிக்கப்பட்டு இறக்கின்றனர் என்றும், இவர்களில், வயது முதிர்ந்தோரும் குழந்தைகளும் பெருமளவான விழுக்காடு என்றும், உலக நலவாழ்வு நிறுவனம் கூறியுள்ளது.

சரியான கண்காணிப்பு இல்லாமல் இயக்கப்படும் வாகனங்களே, காற்று மாசுக்கேட்டின் முதல் காரணம் என்பதும், இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி