சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:
வத்திக்கான் வானொலி

முகப்பு பக்கம் / உலகம் / கலை, கலாச்சாரம்

உலக ஆசிரியர்கள் தினம் அக்டோபர் 05


அக்.04,2016. “ஆசிரியர்களின் மதிப்பை உணர்ந்து, அவர்களின் நிலைமையை மேம்படுத்துதல்” என்ற தலைப்பில், 2016ம் ஆண்டின் உலக ஆசிரியர்கள் தினம், அக்டோபர் 05, இப்புதனன்று கடைப்பிடிக்கப்படுகின்றது.

இத்தினம் குறித்து அறிக்கை வெளியிட்ட யுனெஸ்கோ நிறுவனம், 2030ம் ஆண்டின் ஐ.நா.வின் புதிய வளர்ச்சித் திட்ட இலக்குகளை நிறைவேற்றுவதற்கு, ஆசிரியர்களுக்கு ஆதரவளிக்க வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளது.

உலக அளவில், 2030ம் ஆண்டிற்குள், ஆரம்பக் கல்வித் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு, 32 இலட்சத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்களும், உயர்நிலைக் கல்வித் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு, 51 இலட்சத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்களும் தேவை என்று ஐ.நா. கூறுகிறது. 

உலக ஆசிரியர்கள் தினம், 1994ம் ஆண்டிலிருந்து அக்டோபர் 5ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி