சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:
வத்திக்கான் வானொலி

முகப்பு பக்கம் / திருஅவை / ஆசியா

பாகிஸ்தான் ஆயர்கள் : மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம்


நவ.26,2016. பாகிஸ்தானில், சிறுபான்மை மதத்தவர் தொடர்புடைய தற்போதைய நிலைமையை அறிவதற்கு உதவியாக, நாடு தழுவிய மக்கள் தொகை கணக்கெடுப்பு இடம்பெற வேண்டும் என்று, அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

நாட்டின் நல்ல நிர்வாகத்திற்கும், சமூகநலப் பணிகளைச் சிறப்பாக ஆற்றுவதற்கும், வளங்கள் சமமாகப் பங்கிடப்படுவதற்கும், மக்கள் தொகை கணக்கெடுப்பு மிகவும் முக்கியம் என்று, பாகிஸ்தான் ஆயர்கள், அண்மையில், லாகூரில் நடத்திய கூட்டத்தில்  கூறினர்.

அதோடு,  பாகிஸ்தானில் வாழும் கிறிஸ்தவர்களும், மற்ற சிறுபான்மை மதத்தவரும், தங்கள் மக்களுக்குப் போதுமான பணிகளை ஆற்றுவதற்கு, அவர்களின் எண்ணிக்கையை, துல்லியமாக அறிவதற்கு விரும்புகின்றனர் என்றும் ஆயர்கள் தெரிவித்தனர்.

பாகிஸ்தானில், 1998ம் ஆண்டில், மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. அதற்குப் பின்னர், 2016ம் ஆண்டில் நடத்தப்பட திட்டமிடப்பட்டது, ஆனால், அது குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும், இதுவரை வெளியிடப்படவில்லை என்று, ஊடகச் செய்திகள் கூறுகின்றன.  

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி