சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:
வத்திக்கான் வானொலி

முகப்பு பக்கம் / திருஅவை / இந்தியா, இலங்கை

மறைந்த தமிழக முதல்வருக்கு திருஅவையின் பாராட்டு


டிச.06,2016. தமிழக மக்களின் உணர்வுகளையும் எண்ணங்களையும் சரியான முறையில் புரிந்துகொண்டு, அவர்களுக்கேற்ற திட்டங்களை வகுத்து உதவியவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என, தன் பாராட்டுக்களை வெளியிட்டுள்ளார் இந்தியக் கர்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி.

தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆழ்ந்த இரங்கலை வெளிப்படுத்தி, செய்தி வெளியிட்டுள்ள கர்தினால் ஆலஞ்சேரி அவர்கள், ஓர் உறுதியான தலைமைத்துவத்தைக் கொடுத்து, அதன் வழியாக தமிழக மக்களின் வளமான வாழ்வுக்கு பங்காற்றியதற்கு, செல்வி ஜெயலலிதாவைப் பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழக ஆயர் பேரவைத் தலைவர், மதுரை பேராயர் அந்தோனி பாப்புசாமி அவர்களும், தமிழக முதல்வரின் மரணம் குறித்து ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டுள்ளார்.

தமிழக முதல்வரின் மரணம் குறித்து ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டு, UCA செய்தியிடம் பேசிய, இயேசு சபையின் ஜீவன் பத்திரிகை ஆசிரியர் அருள்பணி ஜோ ஆன்டனி சே.ச. அவர்கள், செல்வி ஜெயலலிதா அவர்கள், தன் கட்சி மற்றும் ஆட்சி நிர்வாகத்திலும் சிறந்த கட்டுப்பாட்டைக் கொண்டிருந்ததோடு, ஏழைகளின் நலனை மனதில் கொண்டு பல்வேறு திட்டங்களைத் தீட்டி வெற்றி கண்டவர் என்று கூறினார்.

ஆதாரம் :  UCAN/Agencies/வத்திக்கான் வானொலி