சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:
வத்திக்கான் வானொலி

முகப்பு பக்கம் / திருஅவை / இந்தியா, இலங்கை

தலித் மக்களின் மேம்பாட்டிற்கு இந்தியத் திருஅவை அர்ப்பணம்


டிச.19,2016.  சாதிப் பாகுபாடு என்பது மிகப்பெரும் சமூகப் பாவம், தீண்டாமை என்பது திருஅவைக்குள் ஒரு நாளும் சகித்துக்கொள்ளப்படாது' என அறிவித்துள்ளனர், இந்திய ஆயர்கள்.

தலித் மக்களுக்கு சரி நிகர் வேலை வாய்ப்புகளை உறுதிச் செய்வது, அவர்களில் பொதுநிலைத் தலைமைத்துவப் பண்பை ஊக்குவித்தல், ஏழை தலித் மாணவர்களுக்கு கல்வித் உதவித்தொகை வழங்குதல், சமூக நீதிக்கு உதவுதல், அவர்கள் நீதியான உதவிப்பெற உதவுதல் போன்றவற்ற உள்ளடக்கிய வழிமுறைகளை வகுத்துள்ளனர், இந்திய ஆயர்கள்.

தலித் மக்களை மேம்படுத்துவதில் ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் இருக்கும் கடமைகள் வலியுறுத்தப்பட வேண்டும் எனவும், சாதி மற்றும் மத அடிப்படையிலான பாகுபாடுகள் அகற்றப்பட உழைக்க வேண்டும் எனவும், இந்திய கத்தோலிக்க ஆயர்கள், மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஆதாரம் : ICN/வத்திக்கான் வானொலி