சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:
வத்திக்கான் வானொலி

முகப்பு பக்கம் / திருத்தந்தை பிரான்சிஸ் / நிகழ்வுகள்

புனிதர்,அருளாளர் நிலைகளுக்கென புதுமைகள் ஏற்பு


டிச.23,2016. புனிதர் மற்றும் அருளாளர் நிலைகளுக்கு உயர்த்துவதற்கென, அருளாளர் Faustino Míguez González, இறையடியார் Leopoldina Naudet ஆகிய இருவரின் பரிந்துரைகளால் நடந்த புதுமைகளை அங்கீகரித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இஸ்பெயின் நாட்டவரான, பியாரிஸ்ட் சபை அருள்பணியாளர் Faustino Míguez González (1831-1925) அவர்கள், இறைமேய்ப்பர் பிள்ளைகள் சபையை ஆரம்பித்தவர். இத்தாலியரான இறையடியார் Leopoldina Naudet (1773-1834) அவர்கள், வெரோனாவின் திருக்குடும்ப சகோதரிகள் சபையைத் தொடங்கியவர்.

மேலும், 1936 மற்றும் 1937ம் ஆண்டுகளில், இஸ்பானிய உள்நாட்டுப் போரில் கொல்லப்பட்ட, கிளாரிசியன் அருள்பணியாளர் Mateu Casals Mas (1883-1936), அச்சபையின் பயிற்சி மாணவர் Teófilo Casajús Alduán (1914-36), அருள்சகோதரர் Ferran Saperas Aluja (1905-36), இன்னும், அவர்களோடு சேர்ந்த 106 மறைசாட்சிகள் குறித்த விபரங்களை ஏற்றுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

Marseilleல், புனித யோசேப்பு மருத்துவமனையை நிறுவிய பிரெஞ்சு அருள்பணியாளர் Jean-Baptiste Fouque (1851-1926), இத்தாலிய Passionist சபையின் துறவி தூய ஆவியாரின் லொரென்சோ (1874-1953), இஸ்பானிய, திரு இதயங்களின் அருள்சகோதரிகள் மறைபோதக சபையை ஆரம்பித்த அருள்சகோதரி Maria Rafela (1814-99), இயேசுவின் திருஇதய திருத்தூதர்கள் சபையைத் தொடங்கிய இத்தாலியரான அன்னை Clelia Merloni (1861-1930), ஓப்புஸ் தேய் பக்த அமைப்பின் Isidoro Zorzano Ledesma (1902-43) ஆகிய ஐந்து இறையடியார்களின் விரத்துவமான வாழ்வு முறைகள் குறித்த விபரங்களையும் திருத்தந்தை ஏற்றுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி