சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:
வத்திக்கான் வானொலி

முகப்பு பக்கம் / உலகம் / கலை, கலாச்சாரம்

இலங்கையில் உலகிலேயே அதிக உயரமான கிறிஸ்மஸ் மரம்


சன.03,2017. இலங்கையில், பல வாரங்களாக நடந்த விவாதத்திற்குப் பின்னர், புத்த மற்றும் முஸ்லிம் மதத்தவரின் உதவியுடன், உலகிலேயே அதிக உயரமான கிறிஸ்மஸ் மரம், புத்தாண்டு தினத்தன்று அமைக்கப்பட்டது.

ஏறக்குறைய அறுபது இலட்சம் ரூபாய் செலவில், நூறு மீட்டர் உயரத்திலுள்ள இம்மரம், எட்டு இலட்சம் நியோன் பல்புகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இந்த உயரமான கிறிஸ்மஸ் மரம் அமைக்கப்படுவதற்கு, புத்த மதத்தினரும் முஸ்லிம்களும் அதிகம் உதவியுள்ளனர்.

இத்திட்டத்தை ஏற்பாடு செய்த Mahinda Nanayakkara அவர்கள், புத்தமதத்தினர் பெரும்பான்மையாக வாழ்கின்ற இலங்கையில், இம்மரம், இன மற்றும் சமய நல்லிணக்கத்திற்கு உதவும் என்று கூறினார்.

நண்பர்கள் மற்றும் உள்ளூர் நிறுவனங்களின் உதவியுடன் இம்மரத்தை அமைத்ததாகவும், ஆசியச் செய்தியிடம் கூறிய Nanayakkara அவர்கள், இம்மரத்தின் முப்பது டன் எடையுள்ள கிளைகளுக்கு வர்ணம் பூசத் தேவையான மூவாயிரம் லிட்டர் வர்ணத்தை, Multilac என்ற, உள்ளூர் வர்ண நிறுவனம் உதவியது எனத் தெரிவித்தார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி