சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:
வத்திக்கான் வானொலி

முகப்பு பக்கம் / திருத்தந்தை பிரான்சிஸ் / எழுத்து வடிவில்

மனிதருக்கு வழங்கப்படும் மரியாதை, தொழில் உலகின் மையம்


பிப்.08,2017. மனிதரும், அவருக்கு வழங்கப்படும் மரியாதையும், தொழில் உலகத்தின் மையங்களாக அமைய வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று அனுப்பிய ஒரு தந்திச் செய்தியில் கூறியுள்ளார்.

"திருஅவையும், தொழிலும்: இளையோரின் எதிர்காலம் என்ன?" என்ற தலைப்பில், நேப்பிள்ஸ் நகரில் நடைபெறும் இளையோர் கருத்தரங்கு ஒன்றுக்கு, திருத்தந்தை அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.

திருத்தந்தையின் பெயரால், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், நேப்பிள்ஸ் கர்தினால், கிரசென்சியோ செப்பே அவர்களுக்கு அனுப்பியுள்ள தந்தியில், இளையோருக்கு வழங்கப்படும் தொழில் சார்ந்த உதவிகள், அவர்களது மனிதமாண்பை உறுதிப்படுத்தும் வழிகளில் அமையவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், இத்தாலிய அரசுத்தலைவர், செர்ஜோ மாத்தரெல்லா அவர்களும், இக்கருத்தரங்கையொட்டி, நேப்பிள்ஸ் கர்தினால் செப்பே அவர்களுக்கு தந்தியொன்றை அனுப்பியுள்ளார்.

ஆதாரம் : / வத்திக்கான் வானொலி