சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:
வத்திக்கான் வானொலி

முகப்பு பக்கம் / உலகம் / அரசியல், பொருளாதாரம்

ஜம்மு-காஷ்மீரில் அமைதியைக் கொண்டுவருவதற்கு மதங்கள்


பிப்.11,2017. முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமைதியைக் கொண்டுவருவதற்கு மதங்களின் உதவியைக் கேட்டுள்ளார், ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் Mehbooba Mufti.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமைதி மற்றும் எதார்த்தமான வாழ்வை அமைப்பதற்கு, சமயத் தலைவர்கள் முக்கிய பங்காற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளார் Mehbooba Mufti

இது குறித்துப் பேசிய, ஸ்ரீநகர் பங்குத் தந்தை அருள்பணி ராய் மத்யூ அவர்கள், காஷ்மீரில் அமைதியைக் கொண்டுவருவதற்கு, ஒவ்வொருவரும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனவும், இவ்விடயத்தில் கத்தோலிக்கத் திருஅவை எப்போதும் தயாராக உள்ளது என்றும் தெரிவித்தார்.

காஷ்மீரில், 2016ம் ஆண்டு ஜூலை 8ம் தேதி தொடங்கி, ஐந்து மாதங்கள் நடந்த கலவரத்தில் குறைந்தது 90 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும், 15 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். 

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி