சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:
வத்திக்கான் வானொலி

முகப்பு பக்கம் / திருஅவை / உலகம்

கிறிஸ்தவர் மீது காட்டப்படும் அக்கறை, ஏனையோரை ஒதுக்கக்கூடாது


பிப்.15,2017. மத்தியக் கிழக்கு நாடுகளில் துன்புறும் கிறிஸ்தவர்களுடனும், இன்னும் ஏனைய சிறுபான்மையினர் அனைவரோடும் தங்கள் ஒன்றிப்பை வலியுறுத்தி, அமெரிக்க ஆயர் பேரவை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

குடிபெயர்தல், மதச் சுதந்திரம் மற்றும் நீதி, அமைதி பணிக்குழுவும், கத்தோலிக்க துயர் துடைப்பு அமைப்பும் இணைந்து வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், கிறிஸ்தவர்கள் மீது காட்டப்படும் அக்கறை, ஏனையோரை ஒதுக்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க ஆயர் பேரவையின் சார்பில், அண்மையில் ஈராக் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒரு பயணத்தில், அங்குள்ள கிறிஸ்தவர்களைப் போலவே, எஸிதி இனத்தவரும், ஷியா முஸ்லிம்களும் துன்புறுத்தப்படுவதைக் கண்கூடாகக் காண முடிந்ததென்று, இவ்வறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட அனைவரையும் வரவேற்கும் மனநிலையை, அமெரிக்க ஐக்கிய நாடு உருவாக்க வேண்டும் என்று, ஆயர்கள், இவ்வறிக்கையில், சிறப்பாக விண்ணப்பித்துள்ளனர்.

ஆதாரம் : USCCB / வத்திக்கான் வானொலி