சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:
வத்திக்கான் வானொலி

முகப்பு பக்கம் / திருஅவை / உலகம்

அயர்லாந்து கர்தினால் Connell மரணம்


பிப்.21,2017. அயர்லாந்து நாட்டின் டப்ளின் முன்னாள் பேராயர், கர்தினால் Desmond Connell அவர்கள், தனது 91வது வயதில், இச்செவ்வாயன்று இறைவனடி சேர்ந்தார்.

1926ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி, அயர்லாந்தின் Phibsboroவில் பிறந்த கர்தினால் Desmond Connell அவர்கள், டப்ளின் உயர்மறைமாவட்டத்திற்காக, 1951ம் ஆண்டில், அருள்பணியாளராகவும், 1988ம் ஆண்டில் டப்ளின் உயர்மறைமாவட்டத்தின் பேராயராகவும் திருநிலைப்படுத்தப்பட்டார். 

2001ம் ஆண்டில் கர்தினாலாக உயர்த்தப்பட்ட இவர், 2005ம் ஆண்டு ஏப்ரலில், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட கான்கிளேவிலும் பங்கேற்றுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி