சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:
வத்திக்கான் வானொலி

முகப்பு பக்கம் / வார ஒலிபரப்பு / முதல் நிமிடம்

பாசமுள்ள பார்வையில்... நெருப்பிலும், நெஞ்சில் ஈரம்...


பெருநகரின் ஓரத்தில் இருந்த அந்தச் சேரியில் தீப்பிடித்தது. அனைவரும், அவரவர் குடிசையில் இருந்தவற்றைக் காப்பாற்ற முயன்றனர். கைம்பெண் கமலா, தன் வீட்டுப் பொருள்களைக் காப்பாற்றுவதற்குப் பதில், பக்கத்து வீட்டு மல்லிகாவுடன் சேர்ந்து, அவர்கள் வீட்டில் இருந்த அனைத்து பொருள்களையும் காப்பதற்கு பெரும் முயற்சிகள் எடுத்தார். கமலாவும், மல்லிகாவும் சேர்ந்து பெருமளவு காப்பாற்றிவிட்டனர். ஆனால், கமலாவின் குடிசை முற்றிலும் எரிந்து, சாம்பலானது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், கமலா, ஏன் தன் வீட்டுப் பொருள்களைக் காப்பாற்றவில்லை என்று கேட்டனர். அப்போது, கமலா, "நான் தனிக்கட்டை. மல்லிகா வீட்டுல நாலு பேர். அடுத்த மாசம் அவ மகளுக்கு கல்யாணம். மல்லிகா, இந்தக் கல்யாணத்துக்கு எவ்வளவு கஷ்டப்பட்டு சேத்து வைச்சான்னு எனக்குத் தெரியும். இந்த கல்யாணம் நல்லபடியா நடந்தா அதுவே எனக்கு ரொம்ப மகிழ்ச்சி" என்று கூறினார்.

வாழ்வு என்ற நெருப்பில் புடமிடப்பட்ட வெகு சிலரில், கைம்பெண் கமலாவும் ஒருவர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி