மார்ச்,02,2017. இப்புதனன்று (மார்ச்,01) கிறிஸ்தவர்கள் தவக்காலத்தைத் தொடங்கியுள்ளனர்.
இத்தவக்காலத்தில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய சில நோன்புகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்
பரிந்துரைத்திருக்கின்றார். சுடுசொற்களைத் தவிர்த்து, இனியச் சொற்களைப் பேசுதல், திருப்தியற்ற
நிலையைத் தவிர்த்து, நன்றியுணர்வால் நிறைந்திருத்தல், கோபத்தைத் தவிர்த்து, பொறுமையைக்
கடைப்பிடித்தல், அவநம்பிக்கையைத் தவிர்த்து நம்பிக்கையில் வளர்தல், கவலைகளைத் தவிர்த்து,
கடவுள் நம்பிக்கையில் நிறைதல், குறைகூறுதலைத் தவிர்த்து, எளிமையில் வாழ்தல், மனஅழுத்தங்களில்
மூழ்கிவிடாமல், செபத்தில் ஆழ்ந்திருத்தல், கசப்புணர்வுகளை அகற்றி, மனதை மகிழ்வால் நிறைத்தல்,
தன்னலத்தை அகற்றி, பிறரிடம் கருண காட்டுதல், பழிவாங்குதலை நீக்கி, மன்னிப்பிலும், ஒப்புரவிலும்
வாழ்தல், மற்றவர் பேசுவதைக் கேட்பதற்காக, சொற்களைக் குறைத்தல்... இந்த நோன்புகளைக் கடைப்பிடித்தால்,
நம் அன்றாட வாழ்வில், அமைதி, மகிழ்வு, வாழ்வு மீதும், பிறர் மீதும் நம்பிக்கை ஆகியவை
நிறைந்திருக்கும். அ.பணி. சகாயநாதன் அவர்கள், நோன்பும், மதங்களும் என்ற தலைப்பில், இன்று
நம்மோடு தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறார். சுல்தான்பேட் மறைமாவட்டத்தைச் சேர்ந்த
இவர், உரோம் உர்பானியானம் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் மறைபரப்பு இயல் கல்வி பயின்று வருகிறார்.
சமூக வலைத்தளங்கள்: