சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:
வத்திக்கான் வானொலி

முகப்பு பக்கம் / திருஅவை / நீதிப் பணி

அணு ஆயுதங்களைக் களைவது குறித்து காரித்தாஸ் விண்ணப்பம்


மார்ச்,09,2017. இவ்வாண்டு சனவரி முதல் தேதியன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட உலக அமைதி நாள் செய்தியில், அணு ஆயுதங்களைக் களைவது குறித்து விடுத்த விண்ணப்பத்தை, இத்தாலிய காரித்தாஸ் அமைப்பும், Pax Christi அமைப்பும், ஐ.நா. அவையிடம் மீண்டும் வலியுறுத்தியுள்ளன.

ஆயுதங்களின் களைவு என்ற தலைப்பில், ஐ.நா. அவை, மார்ச் 27ம் தேதி, மேற்கொள்ளும் ஒரு கூட்டத்திற்கு முன்னதாக, இத்தாலிய காரித்தாஸ் மற்றும்  Pax Christi அமைப்புகள் அனுப்பியுள்ள இந்த விண்ணப்பத்தில், திருத்தந்தையின் உலக அமைதி நாள் செய்தி நினைவுறுத்தப்பட்டுள்ளது.

அணு ஆயுதங்களின் பயன்பாடு, மீண்டும் சீர் செய்யமுடியாத அழிவுகளை உருவாக்குவதாலும், சுற்றுச்சூழலை நிரந்தமாக பாதிப்பதாலும், அவற்றை முற்றிலும் ஒழிப்பதற்கு, அனைத்து நாடுகளும் முன்வர வேண்டும் என்று, இவ்விண்ணப்பத்தில் கூறப்பட்டுள்ளது.

இத்தாலிய காரித்தாஸ் அமைப்பின் தலைவர், கர்தினால் Francesco Montenegro அவர்களும், Pax Christi அமைப்பின் தலைவர், பேராயர், Giovanni Ricchiuti அவர்களும் இணைந்து இவ்விண்ணப்பத்தை இத்தாலிய அரசுக்கும், ஐ.நா. அவைக்கும் அனுப்பியுள்ளனர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி