சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:
வத்திக்கான் வானொலி

முகப்பு பக்கம் / வார ஒலிபரப்பு / நேர்காணல்

நேர்காணல் – ஓர் அருள்பணியாளரின் எழுத்து, இசைப் பயணம்


மார்ச்,09,2017. இயேசு சபை அருள்பணி M.A.ஜோ ஆன்டனி அவர்கள், இயேசு சபை மதுரை மாநிலத் தலைவருக்கு உதவியாளர். ஆங்கில, தமிழ் இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கும் இவர், இந்த இதழ்களில் தொடர் கட்டுரைகளையும் எழுதி வருகிறார். பல நூல்களையும், திருஇசை குறுந்தகடுகளையும் வெளியிட்டுள்ளார். ஜீவன் என்ற இயேசு சபையினரின் இதழின் ஆசிரியராகவும் தற்போது பணியாற்றி வருகிறார்.   SIGNIS என்ற உலக கத்தோலிக்க மக்கள்தொடர்பு கழகம், அருள்பணி M.A.ஜோ ஆன்டனி அவர்களின் எழுத்து மற்றும் இசைப் பயணத்தை பாராட்டி, அவருக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருதை அண்மையில் வழங்கியுள்ளது. 1928ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும், உலக கத்தோலிக்க திரைப்பட நிறுவனம் (OCIC), உலக கத்தோலிக்க வானொலி, தொலைக்காட்சி கழகம் (UNDA) ஆகிய இரண்டும், 2001ம் ஆண்டு நவம்பரிலிருந்து, ஒன்றாக இணைக்கப்பட்டு, SIGNIS (உலக கத்தோலிக்க மக்கள்தொடர்பு கழகம்) என்ற பெயரில் இயங்கி வருகிறது. இது, 122 நாடுகளில், 150 உறுப்பு கழகங்கள் மற்றும் 76 இணை கழகங்களைக் கொண்டுள்ளது