சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:
வத்திக்கான் வானொலி

முகப்பு பக்கம் / வத்திக்கான் / நிகழ்வுகள்

சீர்திருத்தத்தின் பாதையில் திருஅவையோடு திருத்தந்தை


மார்ச்,13,2017. சீர்திருத்தத்தின் பாதையில் எப்போதும் சென்றுகொண்டிருக்கும் திருஅவையில், தற்போதைய திருத்தந்தையின் குரல், உள்மன சீர்திருத்தத்திற்கு அழைப்புவிடுப்பதாக உள்ளது என உரைத்தார், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையின் இவ்வுலகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு,  இத்திங்களோடு, நான்கு ஆண்டுகள் நிறுவுறுவதையொட்டி, வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த, திருப்பீடச் செயலர், கர்தினால் பரோலின் அவர்கள், எந்த ஒரு மறுமலர்ச்சியும், புதுப்பித்தலும், முதலில் இதயத்திலிருந்து பிறக்க வேண்டும் என்பதை, திருத்தந்தை வலியுறுத்துவதை சுட்டிக்காட்டினார்.

திருத்தந்தையின் ஒவ்வொரு நடவடிக்கையும் திருஅவையை புதுப்பித்தே வருகின்றன என்பதையும் சுட்டிக்காட்டிய திருப்பீடச் செயலர், அன்பின் மகிழ்வு என்ற திருத்தூது அறிவுரை மடல், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையின் முதுபெரும் தந்தை, கிரில் அவர்களுடன் சந்திப்பு, போலந்தில் இளையோர் கொண்டாட்டம், ஆஷ்விட்ஸ்  வதை முகாமைப் பார்வையிட்டது, அன்னை தெரேசாவின் புனிதர் பட்டமளிப்பு விழா, லூத்தரன் கிறிஸ்தவ சபையின் 500ம் ஆண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்பு, இரக்கத்தின் யூபிலி போன்றவற்றைக் குறிப்பிட்டு, தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி