சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:
வத்திக்கான் வானொலி

முகப்பு பக்கம் / திருஅவை / இந்தியா, இலங்கை

கட்டக் பேராலயத்தில் ஆன்மீகப் புதுப்பித்தல் தியானம்


மார்ச்,20,2017, இந்தியாவின் ஒடிசா மாநிலத்திலுள்ள கட்டக் நகர் செபமாலை அன்னை பேராலயத்தில் அண்மையில் இடம்பெற்ற தவக்காலத் தியானத்தில், மூவாயிரம் பேர் கலந்துகொண்டனர்.

நான்கு நாள்கள் இடம்பெற்ற இந்த ஆன்மீகப் புதுப்பித்தல் தியானத்தின் இறுதி நாளில், மறையுரை வழங்கிய கட்டக்-புவனேஸ்வர் பேராயர் ஜான் பார்வா அவர்கள், கடவுள் நம்மோடு இருக்கும்போது, நாம், அறிவு, விசுவாசம், மெய்யுணர்வு, சக்தி மற்றும், பலத்தைப் பெறுகிறோம், அத்தகைய நிலை, செபத்தின் வழியாக இயலக்கூடியதே என்றார்.

இந்த ஆன்மீகப் புதுப்பித்தல் தியானத்தை வழிநடத்திய அருள்பணி அனில் தேவ் அவர்கள், இறைவார்த்தையாம் இயேசுவின் அன்பு, தியாகம் ஆகியவற்றை வலியுறுத்தியதுடன், ஆன்மீக மற்றும், உடல்சார்ந்த குணப்படுத்தலுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வழி நடத்தினார்.

உலகாயுதப் பொருள்களின் மீதுள்ள நாட்டத்தால் அல்ல, மாறாக, உள்மனப் புதுப்பித்தலின் வழியாக, அமைதியையும், நிம்மதியையும் அடையலாம் என்பதை, இத்தியானம் வழியாகப் பெற்றுள்ளதாக, இதில் கலந்துகொண்டோர் பகிர்ந்துகொண்டனர்.

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி