சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:
வத்திக்கான் வானொலி

முகப்பு பக்கம் / திருத்தந்தை பிரான்சிஸ் / நிகழ்வுகள்

இலண்டன் வன்முறைத் தாக்குதல்கள் – திருத்தந்தையின் செய்தி


மார்ச்,23,2017. மத்திய இலண்டன் பகுதியில் நடைபெற்றுள்ள வன்முறைத் தாக்குதல்களால் உயிரிழந்தோர், மற்றும் காயமுற்றோர் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் ஆழ்ந்த வருத்தத்தை ஒரு தந்தியின் வழியே தெரிவித்துள்ளார்.

திருத்தந்தையின் அனுதாபங்களைத் தெரிவிக்கும் இத்தந்தியை, வெஸ்ட்மின்ஸ்டர் பேராயர் கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ் அவர்களுக்கு, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ளார்.

இறந்தோரின் ஆன்ம இளைப்பாற்றிக்காவும், காயமற்றோர் குணமடைவதற்கும் திருத்தந்தை தன் செபங்களை அளிப்பதாக இத்தந்தியில் கூறப்பட்டுள்ளது.

இலண்டன் பாராளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில், இப்புதனன்று பிற்பகல் நடைபெற்ற வன்முறை தாக்குதல்களில், ஒரு காவல்துறை அதிகாரி உட்பட, 4 பேர் உயிரிழந்துள்ளனர், மற்றும் 29 பேர் காயமுற்றுள்ளனர் என்று ஊடகங்கள் கூறியுள்ளன.

தீவிரவாத தாக்குதல்கள் என்று சந்தேகிக்கப்படும் இத்தாக்குதல்கள் குறித்து தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி