சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:
வத்திக்கான் வானொலி

முகப்பு பக்கம் / திருத்தந்தை பிரான்சிஸ் / எழுத்து வடிவில்

இளையோர், நற்செய்தியின் மகிழ்வை எடுத்துச்செல்பவர்கள்


மார்ச்,29,2017. கிறிஸ்துவைச் சார்ந்த குடும்பத்தில் வாழும் இளையோர், உரையாடல் வழியாகவும், சந்திக்கும் கலாச்சாரம் வழியாகவும், நற்செய்தியின் மகிழ்வை வாழ்வின் அனைத்து தளங்களுக்கும் எடுத்துச்செல்பவர்கள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஐரோப்பிய ஆயர்களுக்கு அனுப்பிய ஒரு செய்தியில் கூறியுள்ளார்.

மார்ச் 28, இச்செவ்வாய் முதல், 31, இவ்வெள்ளி முடிய, இஸ்பெயின் நாட்டின் பார்சலோனா நகரில் நடைபெறும் ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் உயர் மட்டக் கூட்டத்திற்கு, திருத்தந்தையின் பெயரால், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ள செய்தியில், இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

நற்செய்தி அறிவிப்பு மற்றும் இளையோருடன் இணைந்து செல்லுதல் ஆகிய கருத்துக்களில் ஆயர்கள் மேற்கொண்டுள்ள கூட்டம் சிறப்பாக அமைவதற்கு தன் வாழ்த்துக்களை இச்செய்தியின் வழியே தெரிவித்துள்ளார், திருத்தந்தை.

"கிறிஸ்துவின் அழைப்பிற்கு மனச் சுதந்திரத்துடன் பதிலிருக்க, இளையோரை ஊக்குவித்தல்" என்ற தலைப்பில் நடைபெறும் ஆயர்கள் கூட்டத்திற்கு பொறுப்பாளரான பார்சலோனா பேராயர் Juan José Omella Omella அவர்களுக்கு இச்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி