சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:
வத்திக்கான் வானொலி

முகப்பு பக்கம் / திருத்தந்தை பிரான்சிஸ் / பயணங்கள்

நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் திருத்தந்தை


ஏப்.,03,2017. இம்மாதம் 2ம் தேதி ஞாயிறன்று, இத்தாலியின் கார்பி மறைமாவட்டத்திற்கு ஒரு நாள் மேய்ப்புப்பணி பயணத்தை மேற்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலிய நேரம் காலை 9.45 மணிக்கு, அதாவது இந்திய நேரம் பிற்பகல் 1.15 மணிக்கு, ஹெலிகாப்டரில், கார்பி நகரைச் சென்றடைந்த திருத்தந்தை, 10.30 மணிக்கு விசுவாசிகளுக்கு திருப்பலி நிறைவேற்றினார்.

அப்பகுதியின் ஆயர்களோடும், கார்பி மறைமாவட்ட ஓய்வுபெற்ற அருள்பணியாளர்களோடும், அருள்பணிக்கென பயிற்சி பெறும் மாணவர்களோடும் இணைந்து மதிய உணவை அருந்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிற்பகல் 3 மணிக்கு அம்மறைமாவட்ட குருத்துவ இல்லத்தில் அருள்பணியாளர்கள், துறவிகள் மற்றும் அருள்பணிக்கென பயிற்சி பெறும் மாணவர்களுக்கு உரை ஒன்றும் நிகழ்த்தினார்.

2012ம் ஆண்டின் நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மிரந்தோலா கோவிலின் முன், அப்பகுதி மக்களுக்கு உரை ஒன்றும் வழங்கியபின், உள்ளூர் நேரம், மாலை 5.30 மணிக்கு, அங்கிருந்து உரோம் புறப்பட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி