சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:
வத்திக்கான் வானொலி

முகப்பு பக்கம் / திருத்தந்தை பிரான்சிஸ் / பயணங்கள்

மிலான் உயர்மறைமாவட்ட மக்களுக்கு திருத்தந்தையின் நன்றி மடல்


ஏப்.,05,2017. மிலான் நகர மக்களின் நம்பிக்கைக்காகவும், அவர்கள் காட்டிய அன்பு நிறை வரவேற்பிற்காகவும் தன் நன்றியை தெரிவிப்பதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மடல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

மார்ச் 25, சனிக்கிழமை, கிறிஸ்து பிறப்பு அறிவிப்பு திருநாளன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மிலான் உயர்மறைமாவட்டத்தில் மேற்கொண்ட மேய்ப்புப்பணி பயணத்திற்குப் பின், அவர், மார்ச் 31 கடந்த வெள்ளியன்று, மிலான் பேராயர் கர்தினால் ஆஞ்செலோ ஸ்கோலா அவர்களுக்கு அனுப்பிய நன்றி மடலை, அம்மறைமாவட்டம் வெளியிட்டுள்ளது.

தன் பயணத்திட்டத்தை மிகுந்த கவனத்துடன் வடிவமைத்த கர்தினால் ஸ்கோலா அவர்களுக்கும், அனைத்து ஏற்பாடுகளையும் செய்த குழுவினர் அனைவருக்கும் திருத்தந்தை சிறப்பான நன்றியை வெளிப்படுத்தியுள்ளார்.

மிலான் நகர மக்கள், துறவியர், சிறப்பாக, இளையோர் அனைவரோடும் தான் மேற்கொண்ட அனைத்து சந்திப்புக்களும் செப உணர்வு நிறைந்ததாக இருந்ததென்றும், ஒவ்வொரு குழுவிலும் வெளிப்பட்ட உண்மையான அன்பு தன்னைக் கவர்ந்ததென்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் நன்றி மடலில் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி