சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:
வத்திக்கான் வானொலி

முகப்பு பக்கம் / திருஅவை / உலகம்

எகிப்து தாக்குதலுக்கு உலக திருஅவைகள் கண்டனம்


ஏப்.,10,2017. இதற்கிடையே, எகிப்து கிறிஸ்தவக் கோவில்கள்மீது நடத்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தக்குதல்கள் குறித்து தன் கண்டனத்தை வெளியிட்டுள்ளது இந்திய தலத்திருஅவை.

இத்தகைய வன்முறைச் செயல்கள், எக்காலத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை என்று, இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் பொதுச் செயலர் ஆயர் தியோதர் மஸ்கரீனஸ் அவர்கள், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கோவில்கள் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல்களைத் தொடர்ந்து, எகிப்தில், மூன்று மாதங்கள், அவசர கால நிலையை, அரசுத் தலைவர் அறிவித்துள்ளதை வரவேற்கும் அதேவேளை, இத்தகையக் கொடும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்ற விண்ணப்பத்தை முன்வைப்பதாகவும் ஆயர் மஸ்கரீனஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும், WCC எனும் உலக கிறிஸ்தவ சபைகளின் அவையும், எகிப்து தாக்குதல் குறித்து தன் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

இது தவிர, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை, இங்கிலாந்து கத்தோலிக்க தலைவர்கள், ஜெர்மன் ஆயர் பேரவை என பல்வேறு தலத்திருஅவைகளும் தங்கள் கண்டனத்தை வெளியிட்டுள்ளன.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி