சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:
வத்திக்கான் வானொலி

முகப்பு பக்கம் / திருத்தந்தை பிரான்சிஸ் / எழுத்து வடிவில்

தியாகத்தின் மறையுண்மையைப் புரிந்துகொள்வதற்கான அருள்


ஏப்.,10,2017. 'இந்த புனித வாரத்தில் இயேசுவை நோக்கி நம் பார்வையைத் திருப்பி, நமக்காக இயேசு மேற்கொண்ட தியாகத்தின் மறையுண்மையை, மேலும் சிறப்பாக புரிந்துகொள்வதற்குத் தேவையான அருளை வேண்டுவோம்' என, தன் திங்கள் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இஞ்ஞாயிறன்று திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், 'இயேசுவின் திருச்சிலுவையே! கடவுள் மீதும், நன்மைத்தனத்தின் மீதும், ஒளியின் மீதும், நாங்கள் கொள்ளவேண்டிய பேரார்வத்தைத் தூண்டியருளும்' என எழுதியுள்ளார்.

@pontifex என்ற முகவரியில் திருத்தந்தை உருவாக்கிய இச்செய்திகள், வழக்கமான 9 மொழிகளில் வெளியாயின.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி