சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:
வத்திக்கான் வானொலி

முகப்பு பக்கம் / திருஅவை / ஆசியா

சிவகங்கை மறைமாவட்ட முன்னாள் ஆயர் எட்வர்ட் பிரான்சிஸ் மரணம்


ஏப்.11,2017. தமிழகத்தின் சிவகங்கை மறைமாவட்ட முதல் ஆயரும், முன்னாள் ஆயருமான, ஆயர் எட்வர்ட் பிரான்சிஸ் அவர்கள், மரணமடைந்தார் என்பதை, வருத்தத்துடன் அறிவிக்கின்றோம்.

ஏப்ரல் 11, இச்செவ்வாய் உள்ளூர் நேரம் காலை 9.15 மணிக்கு இறைவனடி சேர்ந்த ஆயர் எட்வர்ட் பிரான்சிஸ் அவர்களின் அடக்கச்சடங்குத் திருப்பலி, ஏப்ரல் 12, இப்புதன் மாலை மூன்று மணிக்கு, சிவகங்கை புனித ஜஸ்டின் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறும்.

சிவகங்கை மறைமாவட்ட அலங்கார அன்னை பேராலயத்தில், ஆயர் எட்வர்ட் பிரான்சிஸ் அவர்களின் உடல் அடக்கம் செய்யப்படும் என்று அறிவித்துள்ள, சிவகங்கை மறைமாவட்டத்தின் தற்போதைய ஆயர் ஜெ.சூசை மாணிக்கம் அவர்கள், ஆயர் எட்வர்ட் பிரான்சிஸ் அவர்களின் ஆன்மா நிறைசாந்தி அடையச் செபிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

1930ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி, சேந்தமரம் என்ற ஊரில் பிறந்த ஆயர் எட்வர்ட் பிரான்சிஸ் அவர்கள், 1957ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி அருள்பணியாளராகவும், 1987ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி சிவகங்கை மறைமாவட்ட முதல் ஆயராகவும் அருள்பொழிவு செய்யப்பட்டார். 2005ம் ஆண்டு செப்டம்பர் முதல் நாள், ஆயர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

அருள்பணியாளராக அறுபது ஆண்டுகளும், ஆயராக 29 ஆண்டுகளும் நிறைவு செய்துள்ளார், ஆயர் எட்வர்ட் பிரான்சிஸ்.

ஆதாரம் : Ind.Sec/வத்திக்கான் வானொலி