சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:
வத்திக்கான் வானொலி

முகப்பு பக்கம் / வத்திக்கான் / நிகழ்வுகள்

ஏப்ரல் 19, 16ம் பெனடிக்ட், திருஅவையின் தலைவரான நாள்


ஏப்.19,2017. தன் 90 வருட வாழ்வில், நெருக்கடிகளும், இன்னல்கள் நிறைந்த நேரங்களும் இருந்தாலும், அவற்றிலிருந்து இறைவன் தன்னைக் காத்ததற்காக, அவருக்கு தன் நன்றியைக் கூறுவதாக, முன்னாள் திருத்தந்தை பெனடிக்ட் அவர்கள் கூறினார்.

ஏப்ரல் 16, ஞாயிறன்று, தன் 90வது பிறந்தநாளை நிறைவு செய்த முன்னாள் திருத்தந்தை பெனடிக்ட் அவர்கள், ஏப்ரல் 17 இத்திங்களன்று தான் தங்கியிருக்கும் இல்லத்தில் அமைதியான முறையில் தன் பிறந்தநாளைக் கொண்டாடியவேளையில், தன் நன்றி உணர்வுகளை, சுருக்கமாகப் பகிர்ந்துகொண்டார்.

முன்னாள் திருத்தந்தையின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு, அவர் பிறந்த பவேரியா பகுதியிலிருந்து வந்திருந்த பிரதிநிதிகளுக்கு நன்றி கூறிய 16ம் பெனடிக்ட் அவர்கள், பவேரியா பகுதியை இறைவன் மிக அழகாகப் படைத்ததோடு, அங்கு கிறிஸ்தவ விசுவாசத்தை விதைத்ததால், தான் அந்த விசுவாசத்தில் வளர முடிந்தது என்று கூறினார்.

2005ம் ஆண்டு, ஏப்ரல் 19ம் தேதி, கர்தினால் ஜோசப் இராட்ஸிங்கர் அவர்கள், கர்தினால்களின் 'கான்கிளேவ்' அவையால் தேர்தெடுக்கப்பட்டதையடுத்து, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், திருஅவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாளின் 12வது ஆண்டை, இப்புதனன்று சிறப்பித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி