சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:
வத்திக்கான் வானொலி

முகப்பு பக்கம் / உலகம் / அறிந்து கொள்வோம்

புத்தர் பிறந்தநாளுக்கு ஐ.நா. பொதுச்செயலர் வெளியிட்ட செய்தி


மே,11,2017. புத்தரின் வாழ்விலிருந்து நேர்மறையான உந்துதலைப் பெற்று, உலகினர் அனைவரும் பரிவுள்ள பாதையைத் தெரிவு செய்யவேண்டும் என்று, ஐ.நா. பொதுச் செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் விண்ணப்பித்துள்ளார்.

மே 10, இப்புதனன்று சிறப்பிக்கப்பட்ட புத்தரின் பிறந்தநாளான Vesak திருநாளையொட்டி செய்தி வெளியிட்ட கூட்டேரஸ் அவர்கள், பரிவு என்ற பண்பு காலத்தைக் கடந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புகளில் பெருமளவு வளர்ந்துள்ள இவ்வுலகில், அத்தொடர்பு, மற்றவர் மீது நாம் கொள்ளும் பிரிவிலும், அன்பிலும் வெளிப்படுவதே, புத்தருக்கு நாம் அளிக்கக்கூடிய மரியாதையாக அமையும் என்று ஐ.நா. பொதுச் செயலர் கூட்டேரஸ் அவர்கள், தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

கி.மு. 623ம் ஆண்டு பிறந்த புத்தர், அறிவொளி பெற்றதும், தன் 80வது வயதில் இவ்வுலகைவிட்டுப் பிரிந்ததும், Vesak திருநாளன்று என்று சொல்லப்படுகிறது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி