சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:
வத்திக்கான் வானொலி

முகப்பு பக்கம் / திருஅவை / ஆசியா

அடக்குமுறைகளையும் தாண்டி, வளரும் வடகொரிய திருஅவை


மே,15,2017. கிறிஸ்தவர்களுக்கு எதிரான அடக்குமுறை நடவடிக்கைகள், வட கொரியாவில் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றபோதிலும், கிறிஸ்தவ விசுவாசமும் வேகமாகப் பரவிவருவதாக, அந்நாட்டிலிருந்து வெளியேறிய கிறிஸ்தவ மறைபோதகர் ஒருவர் தெரிவித்தார்.

துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்களுக்காக அமெரிக்க ஐக்கிய நாட்டின் வாஷிங்டன் உலகக் கருத்தரங்கில் உரையாற்றிய வட கொரியாவின் கிம் சுங்-செயோங் (Kim Chung-seong) அவர்கள், வட கொரியாவில் கிறிஸ்தவர்களின் மத உரிமைகளுக்காக, குறிப்பாக, அரசின் மதச்சார்பு உதவிகளுக்காக, உலகின் அனைத்து கிறிஸ்தவ சமூகங்களும் செபிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

உலகில் துன்புறும் கிறிஸ்தவர்கள் சார்பில் 130 நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்த கருத்தரங்கில், கத்தோலிக்கர்கள் உட்பட பல்வேறு கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகள் இருந்தனர்.

அண்மை புள்ளிவிவரங்களின்படி, வட கொரியாவின் 2 கோடியே 54 இலட்சம் மக்கள் தொகையில் 3 இலட்சம் பேர் கிறிஸ்தவர்கள். இதில் 50 ஆயிரம் முதல் 75,000 கிறிஸ்தவர்கள், தொழில் முகாம்களில் தங்கள் தண்டனை காலத்தை செலவிட்டு வருகின்றனர்.

ஆதாரம் : CNA / வத்திக்கான் வானொலி