சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:
வத்திக்கான் வானொலி

முகப்பு பக்கம் / திருஅவை / இந்தியா, இலங்கை

இலங்கை நாடாளுமன்றத்திற்கு ஒழுங்குமுறை அவசியம்


மே,16,2017. இலங்கையில் நாடாளுமன்றம் தொடங்கி, தேசிய அளவில் ஓர் ஒழுங்குமுறை அவசியம் என, அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள் உட்பட, பல்சமயத் தலைவர்கள் கூறினர்.

கொழும்புவின் மஹா போதி கழகத்தில் நடைபெற்ற மதங்கள் மாநாட்டில் உரையாற்றிய, புத்தமதத் தலைவர், Bellanwila Wimalarathana Nayaka Thero அவர்கள், தேசிய அளவில் ஒழுங்குமுறையை ஊக்குவிக்க, எல்லா மதத்தினரும் உழைக்க வேண்டுமென்று கூறினார்.

முதலில், நாடாளுமன்றத்தில் ஒழுங்குமுறை அவசியம் என்றும், சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்றாட நடவடிக்கைகளில் பயன்படுத்தும் வார்த்தைகள் கவலைப்பட வைக்கின்றன என்றும் கூறினார், Wimalarathana Thero.

மேலும், நாட்டின் தேர்தல் ஆணையம் குறித்து, இம்மாநாட்டில் உரையாற்றிய இரத்னபுரா ஆயர், Cletus Chandrasiri அவர்கள், சரியான வேட்பாளர்கள் முன்மொழியப்படாதபோது, யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற சிக்கல் மக்களுக்கு ஏற்படுகின்றது என்று கூறினார்.

மஹா போதி கழகம், உலகிலுள்ள மிகப் பழமையான புத்தமத மறைப்பணி கழகமாகும்.   

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி