சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:
வத்திக்கான் வானொலி

முகப்பு பக்கம் / திருத்தந்தை பிரான்சிஸ் / எழுத்து வடிவில்

15வது பங்குத்தளத்தில் திருத்தந்தையின் ஆன்மீகப் பணி


மே,17,2017. "நம்மிலும், நம் சகோதர, சகோதரிகளிலும், நமது நம்பிக்கையாகத் தங்கி வாழும் இயேசுவை அடையாளம் கண்டுகொள்வோமாக" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் பக்கத்தில் இப்புதனன்று வெளியாயின.

மேலும், மே 21, வருகிற ஞாயிறு மாலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகரின் அச்சிலியா பகுதியில் உள்ள சான் பியர் தமியானி (San Pier Damiani) பங்கிற்கு, மேய்ப்புப்பணி பணியாற்ற செல்கிறார் என்று உரோம் மறைமாவட்டம் அறிவித்துள்ளது.

ஞாயிறு மாலை 4 மணியளவில் பங்குத்தளத்தை அடையும் திருத்தந்தை, இளையோர், நோயுற்றோர் மற்றும் குடும்பத்தினரை தனித்தனியே சந்தித்தபின், பங்கு கோவிலில் ஒரு சிலருக்கு ஒப்புரவு அருளடையாளம் வழங்குகிறார். மாலை 6 மணிக்கு அப்பங்கு மக்களுக்குத் திருப்பலி நிறைவேற்றி, பின்னர் வத்திக்கான் திரும்புகிறார் திருத்தந்தை.

உரோம் நகரின் தென் எல்லையில் அமைந்துள்ள சான் பியர் தமியானி பங்குத்தளத்திற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளும் பயணம், அவர் திருத்தந்தையாகப் பொறுப்பேற்றபின்னர் மேற்கொள்ளப்படும் 15வது மேய்ப்புப்பணிப் பயணமாக அமையும்.

1972ம் ஆண்டு திருத்தந்தை அருளாளர் 6ம் பவுல் அவர்களும், 1988ம் ஆண்டு, திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்களும் பியர் தமியானி பங்குத்தளத்திற்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொ