சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:
வத்திக்கான் வானொலி

முகப்பு பக்கம் / வார ஒலிபரப்பு / நேர்காணல்

நேர்காணல் – தமிழர் ஒருவரின் அன்னை மரியா பக்தி


மே,18,2017. லூசியா, பிரான்சிஸ்கோ, ஜசிந்தா ஆகிய மூன்று இளம் சிறாருக்கு, போர்த்துக்கல் நாட்டின் பாத்திமாவில், 1917ம் ஆண்டு மே 13ம் தேதி அன்னை மரியா முதல் முறையாகக் காட்சி கொடுத்ததன் நூற்றாண்டு விழா, இம்மாதம் 13ம் தேதி, கடந்த சனிக்கிழமையன்று பாத்திமாவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், பிரான்சிஸ்கோ, ஜசிந்தா ஆகிய இருவரையும் புனிதர்கள் என அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்த நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்வதற்காக, பாத்திமா செல்லும் வழியில் உரோம் வந்தவர்    திரு.M.A.கிளமென்ட் ஆன்டனி ராஜ். தஞ்சாவூரைச் சேர்ந்த இவரை வத்திக்கான் வானொலிக்கு வரவழைத்து, இவரின் அன்னை மரியா பக்தி பற்றிக் கேட்டோம். திரு.M.A.கிளமென்ட் ஆன்டனி ராஜ் அவர்கள், தஞ்சாவூர் மறைமாவட்டத்தின் மேய்ப்புப்பணி அவையின் செயலராகவும் பணியாற்றுகின்றார்