சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:
வத்திக்கான் வானொலி

முகப்பு பக்கம் / திருத்தந்தை பிரான்சிஸ் / எழுத்து வடிவில்

தூய ஆவியாரிடமிருந்தே உண்மை சுதந்திரம்


மே,30,2017. 'கிறிஸ்தவ மகிழ்வு என்பது தூய ஆவியாரிடமிருந்து வருகிறது. அவரே நமக்கு உண்மை சுதந்திரத்தையும், நம் சகோதர சகோதரிகளுக்கு இயேசுவை எடுத்துச் செல்லும் கொடையையும் வழங்குகிறார்'  என, தன் டுவிட்டர் பக்கத்தில், இச்செவ்வாய்க்கிழமையன்று எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வரும் ஞாயிறன்று தூய ஆவியார் பெருவிழா சிறப்பிக்கப்படவுள்ளதையொட்டி, தன் மறையுரைகளிலும், டுவிட்டர் பக்கத்திலும் தூய ஆவியார் குறித்து அதிகம் அதிகமாக பேசி வருகிறார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இச்செவ்வாய்க்கிழமையன்று, 'அத் லிமினா' சந்திப்பையொட்டி அல்பேனியா நாட்டிலிருந்து உரோம் நகர் வந்திருந்த அந்நாட்டு ஆயர்களை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தூய பேதுருவின் கல்லறையை தரிசிக்கவும், திருத்தந்தையை சந்தித்து தங்கள் மறைமாவட்டம் குறித்து உரையாடவும் ஆயர்கள், ஐந்தாண்டிற்கு ஒருமுறை உரோம் நகர் வருவதே 'அத் லிமினா' சந்திப்பு எனப்படுவதாகும்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி