வத்திக்கான் வானொலியின் தலைப்பு பக்கம்வத்திக்கான் வானொலி
வத்திக்கான் வானொலி   
more languages  
முக்கியச் செய்தி 
திருத்தந்தை : நம்மில் புதைந்து கிடக்கும் நன்மைத்தனத்தின் விதைகளையே இறைவன் பார்க்கிறார்

ஜூலை,21,2014. நம்மில் தீமைகள் பல இருந்தாலும் நமக்குள் புதைந்து கிடக்கும் நன்மைத்தனத்தின் விதைகளையே இறைவன் பார்க்கிறார் என உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கோதுமை பயிரிடையே சாத்தான் களைகளை விதைத்துச் சென்றது பற்றிய உவமை குறித்து இஞ்ஞாயிறு மூவேளை செபஉரையில் எடுத்துரைத்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
நன்மைத்தனங்களின் நடுவே தீமைகளை விதைத்துச் செல்லும் தீயோனின் செயல் குறித்து எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துவக்கத்தில் இவற்றைப் பிரித்துப் பார்த்து களைகளை அகற்றுவது கடினம் எனினும், இறுதியில் இறைவனே அவற்றிற்கு தீர்ப்பளித்து அகற்றுவார் என்றார்.
களைகளை முதலிலேயே பிடுங்கிவிடுவோம் என வேலையாட்கள் அவசரப்பட்டாலும் நல்ல கதிர்களையும் தெரியாமல் பிடுங்கிவிடும் ஆபத்து இருப்பதை தெரிவித்து, தான் பொறுமையுடையவர் என இறைவன் காட்டியதையும் இங்கு எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நம்மில் தீமைகள்  ...»நடப்புச் செய்திகள்................ நடப்புச் செய்திகள்................ 
திருத்தந்தை : வன்முறையை வன்முறையால் அல்ல, அமைதியாலேயே வெல்ல முடியும்

ஜூலை,21,2014. ஒவ்வொருவரிலும் பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒப்புரவை நோக்கிய ஆர்வத்தைக் கொணர இறைவனை நோக்கி வேண்டுவோம் என இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின்போது அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.
உலகின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக மத்தியக் கிழக்குப்பகுதியிலும் உக்ரைனிலும் இடம்பெறும் மோதல்களும், பதட்டநிலைகளும் நிறுத்தப்பட செபிப்போம் என்ற அழைப்பை முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  ...»காசாவை விட்டு வெளியேற அருள்பணியாளர்கள் மறுப்பு

ஜூலை,21,2014. காசா பகுதியில் இஸ்ரேல் துருப்புகளின் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றபோதிலும், அப்பகுதி மக்களுடனேயே தங்கியிருக்க விரும்புவதாக அங்கு பணியாற்றும் அருள்பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.
அச்சம், மனஅழுத்தம், தொடர்ந்த ஓசை போன்றவற்றின் பாதிப்புகளிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்ற பெற்றோர் எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டபோதிலும், குழந்தைகள் இதன் பாதிப்புகளால் நோய்களுக்கு உள்ளாகி வருகின்றனர்  ...»திருஅவையின் பணிகளுக்கு கென்ய அரசுத் தலைவரின் மனைவி பாராட்டு

ஜூலை,21,2014. கென்யாவில் பல இலட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் கத்தோலிக்கத் திருஅவை சிறப்புப் பங்காற்றியுள்ளதாக அந்நாட்டு அரசுத்தலைவரின் மனைவி தன் பாராட்டுக்களை வெளியிட்டுள்ளார்.
நல ஆதரவு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இளையோர் கல்வி போன்றவற்றில் திருஅவையின் பங்களிப்பு முக்கியமானது என தெரிவித்த திருமதி Margaret Kenyatta அவர்கள், மனித குல முன்னேற்றத்திற்காக திருஅவை செயல்படுத்திய  ...»திருஅவை 
திருத்தந்தை பிரான்சிஸ் : AMIA குண்டு வெடிப்பு தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி தேவை

ஜூலை,19,2014. இருபது ஆண்டுகளுக்கு முன்னர் புவனோஸ் அய்ரெஸ் யூதமத மையத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி தேவை என வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அர்ஜென்டீனாவின் இஸ்ரேல் பரஸ்பர கழகமான AMIAவின் ஏழு மாடிக் கட்டிடம், 1994ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி வாகன குண்டுவெடிப்பால் தாக்கப்பட்டதில் அம்மையம் முழுவதும் அழிந்தது. இதில் 85 பேர் உயிரிழந்தனர்.
இத்தாக்குதலின் இருபதாம் ஆண்டு  ...»மோசூல் நகரம், ஈராக் வரலாற்றில் முதன்முறையாக கிறிஸ்தவர்களின்றி காலியாக உள்ளது, முதுபெரும் தந்தை சாக்கோ கவலை

ஜூலை,19,2014. ஈராக் வரலாற்றில் முதன்முறையாக மோசூல் நகரம் கிறிஸ்தவர்களின்றி காலியாக உள்ளது என்ற கவலையைத் தெரிவித்துள்ளார் அந்நாட்டு கல்தேய வழிபாட்டுமுறை கத்தோலிக்க முதுபெரும் தந்தை லூயிஸ் இரஃபேல் சாக்கோ.
‘இஸ்லாமிய அரசு’என்ற தனிநாடாக தன்னிச்சையாக அறிவித்துள்ள ISIS போராளிகள் அமைப்பு கிறிஸ்தவர்களுக்கு எதிராக விடுத்துவரும் எச்சரிக்கையைத் தொடர்ந்து, மோசூல் நகரிலிருந்த கடைசி கிறிஸ்தவக் குடும்பமும்  ...»உலகின் எய்ட்ஸ் நோயாளிகளில் 25 விழுக்காட்டினருக்கு கத்தோலிக்கத் திருஅவை உதவி

ஜூலை,19,2014. ‘விசுவாசத்தை ஆழப்படுத்த’ எனும் தலைப்பில் ஆஸ்திரேலியாவின் மெல்பெர்ன் நகரில் எய்ட்ஸ் நோய் குறித்த அனைத்துலக கத்தோலிக்க கருத்தரங்கு ஒன்று இவ்வெள்ளியன்று தொடங்கியுள்ளது.
மெல்பெர்ன் நகரில், ஜூலை 20 இஞ்ஞாயிறு முதல், 6 நாள்களுக்கு நடக்கவுள்ள எய்ட்ஸ் நோய் குறித்த அனைத்துலக கருத்தரங்குக்கு முன்தயாரிப்பாக, அனைத்துலக காரித்தாஸ் நிறுவனம், எய்ட்ஸ் நோய் குறித்த அனைத்துலக கத்தோலிக்க கருத்தரங்கை  ...»இயேசு சபை வானயியல் அறிவியலாளருக்கு Carl Sagan விருது

ஜூலை,19,2014. மதமும் அறிவியலும் எவ்வாறு ஒன்றிணைந்து செல்கின்றன என்பதை மிகத் திறமையுடன் வெளிப்படுத்தி வருவதைப் பாராட்டும் விதமாக, இயேசு சபை அருள்சகோதரர் Guy Consolmagno அவர்களுக்கு, மதிப்புமிக்க Carl Sagan விருது வழங்கப்பட்டுள்ளது.
அருள்சகோதரர் Consolmagno அவர்கள், வான்கோள்களுக்குரிய அறிவியலைப் பயன்படுத்தி மதமும் அறிவியலும் எவ்வாறு ஒன்றிணைந்து செல்கின்றன என்பதை வெளிப்படுத்தி வருகிறார் என, இவ்விருதை  ...»இஸ்ரேல், பாலஸ்தீனத் தலைவர்களுடன் திருத்தந்தை தொலைபேசி உரையாடல்

ஜூலை,18,2014. இவ்வெள்ளி காலை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஸ்ரேல் அரசுத்தலைவர் Shimon Peres அவர்களையும், பாலஸ்தீன அரசுத்தலைவர் Mahmoud Abbas அவர்களையும் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார் என்று திருப்பீட செய்தித் தொடர்பாளர் கூறினார்.
காசா பகுதியில் ஏற்பட்டுள்ள தாக்குதல்கள் வெறுப்பை வளர்க்கும் ஆபத்தை உருவாக்கியுள்ளன என்றும், பேரளவில் மனிதாபிமான நெருக்கடியையும் இது உருவாக்கி வருகிறதென்றும்  ...»மனித உரிமை/சுற்றுச்சூழல் 

ஜூலை,18,2014. அடுத்தவர் நலனுக்கென 67 நிமிடங்கள் இன்று செலவிட முடியுமா? என்ற கேள்வியுடன் ஜூலை 18, இவ் வெள்ளியன்று அனைத்துலக நெல்சன் மண்டேலா நாள் கடைபிடிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், தன் 95வது வயதில் மறைந்த தென்னாப்ரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலா அவர்களின் பெயரால், ஒவ்வோர் ஆண்டும் ஐ.நா.அவை ஜூலை 18ம் தேதியை, அனைத்துலக நெல்சன் மண்டேலா நாள் என கடைப்பிடித்து வருகிறது.
இந்நாளையொட்டி செய்தி ...»


ஜூலை,17,2014. தீராத நோயினால் துன்புறுவோருக்கு அன்பும் ஆதரவும் தேவை; அதற்குப் பதிலாக, அவர்கள் வாழத் தகுதியற்றவர்கள் என்று சொல்வது மிகவும் கொடுமை என்று Westminster பேராயர், கர்தினால் Vincent Nichols கூறியுள்ளார்.
தீராத நோயுற்றோர் தங்கள் வாழ்வை முடித்துக் கொள்ள விரும்பினால், அவர்களுக்கு மருத்துவர்கள் உதவலாம் என்ற உத்திரவை வழங்கும் சட்டம் ஜூலை 18, இவ்வேள்ளியன்று பிரித்தானிய பாராளுமன்றத்தில் ...»


ஜூலை,16,2014. உலகின் அனைத்து நாடுகளும் மனித வர்த்தகத்தால் பாதிக்கப்பட்டுள்ளன; இந்த வர்த்தகத்தைத் துவக்கும் நாடுகள், இந்த வர்த்தகத்தைப் பயன்படுத்தும் நாடுகள் என்று, பல நிலைகளில் நாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன என்று ஐ.நா. உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
மனித வர்த்தக ஒழிப்பு நாளை இவ்வுலகம் முதல் முறையாக இம்மாதம் 30ம் தேதி கடைபிடிக்க உள்ள இவ்வேளையில், இந்த உலக நாளையொட்டி, ஐ.நா. அவை பல்வேறு ...»


ஜூலை,16,2014. அரசுகள் தங்கள் குடிமக்கள் மீது நடத்தும் ஒட்டு மொத்த கண்காணிப்பு முறைகள், தனி நபர்களின் அந்தரங்க உரிமைகளை மீறும், ஆபத்தான ஒரு போக்காக மாறிவருவதாக ஐ.நா அவை எச்சரித்துள்ளது.
ஒட்டுமொத்த கண்காணிப்புகள் மற்றும் தரவுகள் கட்டாயமாக சேமித்து வைக்கப்படவேண்டும் என்ற நிர்ப்பந்தங்கள் ஆகியவை "தேவையற்றவை மற்றும், அளவுக்கு மீறியவை" என்று வர்ணிக்கும் ஐ.நா அவை அறிக்கை ஒன்று, இத்தகைய நடவடிக்கைகள் ...»


ஜூலை,15,2014. ஈராக் நாட்டில் கடத்தி வைக்கப்பட்டிருந்த இரு அருள்சகோதரிகளும், மூன்று சிறுமிகளும் விடுவிக்கப்பட்டுள்ளது தனக்கு மிகவும் மகிழ்ச்சிதரும் செய்தி என்று கூறியுள்ளார் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை லூயிஸ் இரபேல் சாக்கோ.
மோசூல் பகுதியில் அமல அன்னை புதல்வியர் சபையால் நடத்தப்பட்ட சிறுமிகள் காப்பகத்திலிருந்து அருள்சகோதரிகள் Atur, Miskinta ஆகிய இருவரும், மூன்று சிறுமிகளும் கடந்த மாதம் 28ம் ...»

அமைதி, மத நல்லிணக்கம் 

ஜூலை,18,2014. சமூகம் முழுமைக்கும் பயன்தரும் வகையில், இணக்க வாழ்வின் ஆதாரமாக மதங்கள் ஒன்றிணைந்து செயல்படமுடியும் என்பதை காட்டவேண்டிய நேரம் வந்துள்ளது என இஸ்லாமிய Id al-Fitr விழாவுக்கு வழங்கிய செய்தியில் கூறியுள்ளது மதங்களிடையே உரையாடலை ஊக்குவிக்கும் திருப்பீட அவை.
கடந்த மாதம் 28ம் தேதி துவக்கப்பட்டு இம்மாதம் 28ல் நிறைவுறும் இரமதான் நோன்பு மாதத்தைத் தொடர்ந்து இடம்பெறும் Id al-Fitr விழாவுக்கு ...»


ஜூலை,17,2014. காமரூன் நாட்டிலும், உலகின் பல்வேறு நாடுகளிலும் அமைதி நிலைக்கவேண்டும் என்ற வேண்டுதலுடன் ஜூலை 19, வருகிற சனிக்கிழமை மன்றாட்டு நாள் கடைபிடிக்கப்பட வேண்டுமென்று, ஆப்ரிக்க ஆயர் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார்.
காமரூன் ஆயர் பேரவையின் தலைவரான பேராயர் Samuel Kleda அவர்கள் விடுத்துள்ள இந்த அழைப்பில், பக்கத்து நாடான நைஜீரியாவை அச்சுறுத்தி வரும் Boko Haram வன்முறை கும்பல் தங்கள் அழிவுப் பாதைகளை ...»


ஜூலை,17,2014. ஈராக்கில் நிலவிவரும் வன்முறைகள் தொடருமானால், அந்நாட்டில் கடந்த 2000 ஆண்டுகளாக வாழ்ந்து வந்துள்ள கிறிஸ்தவம், வேரோடு அழிந்துபோகும் ஆபத்து உள்ளது என்று கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, முதலாம் Louis Raphael Sako அவர்கள் கூறியுள்ளார்.
Aid to the Church in Need என்ற கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பின் அழைப்பின் பேரில், Brussels நகரில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் கூட்டத்தில் ...»


ஜூலை,16,2014. இதற்கிடையே, உரோம் நகரில் செயலாற்றும் காரித்தாஸ் அமைப்பு, இஸ்லாமியர், யூதர்கள் ஆகியோருடன் இணைந்து, புனித பூமியில் அமைதி நிலவும்படி சிறப்பு செப வழிபாட்டினை இச்செவ்வாய் மாலை மேற்கொண்டனர்.
எத்தனை வலுவான சுவர்கள் நம்மை பிரித்தாலும், அன்னை மரியாவின் பரிந்துரையோடு மேற்கொள்ளப்படும் செபமாலைகள், பிரிவுச் சுவர்களைத் தகர்த்துவிடும் என்று இந்த செப முயற்சியை ஏற்பாடு செய்தவர்கள் கூறினர்.
மேலும், ...»


ஜூலை,15,2014. ஈராக்கிலிருந்து கிறிஸ்தவர்கள் தொடர்ந்து வெளியேறி வருவதாகவும், கிறிஸ்தவம் அந்நாட்டிலிருந்து காணாமற்போய்விடும் அபாயம் இருப்பதாகவும் கவலையை வெளியிட்டுள்ளனர் அந்நாட்டின் இரு பேராயர்கள்.
துருக்கி, சவுதி அரேபியா மற்றும் வட ஆப்ரிக்காவில் கிறிஸ்தவம் காணாமற்போகும் ஆபத்து இருப்பதாக குறிப்பிட்ட கிர்குக் பேராயர் Yousif Mirkis அவர்கள், லெபனனில் கிறிஸ்தவர்கள் தற்போது சிறுபான்மையினராக ...»


நடப்புச் செய்திகள்.................... 
இராக்கிலிருந்து கிறிஸ்தவர்கள் வெளியேறும்படி அச்சுறுத்தல்

ஜூலை,21,2014. ஈராக்கின் மோசூலில் வாழும் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியச் சட்டங்களை ஏற்று மதம் மாறவேண்டும், அல்லது நாட்டைவிட்டு வெளியேறவேண்டும், இல்லையெனில் ...»


வாய் புற்றுநோய்க்கு தினமும் இந்தியாவில் 4 பேர் பலி

ஜூலை,21,2014. வாய்ப்பகுதியில் ஏற்படும் புற்றுநோய்க்கு, 6 மணிநேரத்திற்கு ஒருவர் இந்தியாவில் பலியாகி வருவதாக அந்நாட்டின் பல் மருத்துவக் கழகச் செயலர் ...»


அரபு ஐக்கிய குடியரசில் இந்தியத் தொழிலாளர்களிடயே தற்கொலைகள் அதிகரிப்பு

ஜூலை,21,2014. அரபு ஐக்கிய நாடுகளில் பணியாற்றும் இந்தியத் தொழிலாலாளர்களின் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்துவருவதாக துபாயிலுள்ள இந்தியத் துணைத்தூதரகம் ...»


இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் 550 குளங்களைக் 'காணவில்லை'

ஜூலை,21,2014. இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்பட்ட 700க்கும் மேற்பட்ட சிறியளவான நீர்ப்பாசன குளங்களில் தற்போது 30 விழுக்காட்டு குளங்கள் ...»


இந்தியா இலங்கை ஆசியா 

ஜூலை,19, 2014. இலங்கையின் வட பகுதியில் தமிழர்களின் சுதந்திரமும் மாண்பும் மீறப்பட்டு அழிக்கப்படுவதாக அரசை குற்றம் சாட்டியுள்ளார் அந்நாட்டு புத்தமத துறவி Bendiwewea Diyasena Thero.
இலங்கை அரசின் தமிழர்க்கெதிரான நடவடிக்கைகளைக் கண்டித்து இவ்வாரத்தில் ...»


ஜூலை,19,2014. இலங்கையில் சிறுவர்கள் தவறாக நடத்தப்படல் தொடர்பாக கடந்த 4 ஆண்டுகளில் 2 இலட்சத்து 10 ஆயிரம் புகார்கள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அவையின் தலைவர் அனோமா திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கிடைக்கப் பெற்றவற்றுள், 25 ஆயிரம் ...»


ஜூலை,18,2014. இவ்வியாழனன்று இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதல் காசா பகுதியில் உள்ள ஒரு கத்தோலிக்கப் பங்குக் கோவிலின் அடுத்த கட்டிடத்தை தரைமட்டமாக்கியது என்று Fides செய்திக் குறிப்பு கூறுகிறது.
துயர் துடைப்புப் பணிகள் நடைபெறுவதற்காக காலை 10 ...»


ஜூலை,18,2014. காசா பகுதியில் தொடர்ந்து நடைபெற்றுவரும் தாக்குதல்களால் அப்பகுதியில் உள்ள மருத்துவ உதவிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன என்று அகில உலக மருத்துவ மற்றும் மனிதாபிமான அமைப்புகள் அறிக்கையொன்றை விடுத்துள்ளன.
இந்தத் தாக்குதல்களால் பெருமளவில் ...»


ஜூலை,17,2014. "ஆகஸ்ட் மாதம் முதல் தேதிக்கு முன்னர் உங்கள் கிராமங்களை விட்டு வெளியேறுங்கள் அல்லது, விளைவுகளைச் சந்திக்கத் தாயாராக இருங்கள்" என்ற எச்சரிக்கையை சத்தீஸ்கர் மாநிலத்தில் வாழும் பழங்குடி கிறிஸ்தவர்களுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் என்ற அமைப்பு ...»

வானொலி நிகழ்ச்சிகள் 
›  வாரம் ஓர் அலசல் – எத்தீமையையும் பார்க்காதே, கேட்காதே, பேசாதே
›  புனிதரும் மனிதரே – தொழிலுக்காக விசுவாசத்தை மறுதலிக்க மறுத்தவர்கள் (Sts Justa and Ruffina)
›  பொதுக்காலம் 16ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை
›  புனிதரும் மனிதரே : அன்னைமரியிடம் வரம் கேட்டுப் பெற்றவர்
›  புனிதரும் மனிதரே : காற்றில் மிதந்தவர்(St. Joseph of Cupertino)
›  நேர்காணல் – கச்சத்தீவு ஒப்பந்தம் குறித்த சில தெளிவுகள்
›  ஜூலை 17. புனிதரும் மனிதரே... தொழுநோயாளர் மத்தியில் துறவு சபை அதிபர்
›  அமைதி ஆர்வலர்கள் : Robert Cecil, 1937ல் நொபெல் அமைதி விருது பெற்றவர்
›  புனிதரும் மனிதரே - கார்மேல் அன்னையின் நினைவால் உலக அமைதி இயக்கம்
›  விவிலியத்
தேடல் மினா நாணய உவமை பகுதி - 7
›  வாரம் ஓர் அலசல் – வார்த்தைகள் வாழ்வளிக்கட்டும்
›  புனிதரும் மனிதரே : தனது தந்தையாலே கொலைசெய்யப்பட்ட மறைசாட்சி (St Barbara)
›  புனிதரும் மனிதரே வானதூதர் இறங்கிவந்து, நிலத்தை உழுத அற்புதம்
›  பொதுக்காலம் 15ம் ஞாயிறு ஞாயிறு சிந்தனை
›  நேர்காணல் – கடல்சார் ஞாயிறு
›  புனிதரும் மனிதரே : அடித்தவரை அன்போடு நோக்கியவர் (St.Gal of Clermont)
›  ஜூலை 10. புனிதரும் மனிதரே... 18 வயது மறைசாட்சி
›  அமைதி ஆர்வலர்கள் : 1936ம் ஆண்டில் நொபெல் அமைதி விருது பெற்ற Saavedra Lamas
›  புனிதரும் மனிதரே - வரலாறு படைத்த புனிதர் பட்டமளிப்பு விழா
›  விவிலியத்
தேடல் மினா நாணய உவமை பகுதி - 6
திருத்தந்தையின் உரைகள்  
›  ஜூன் 25, திருத்தந்தையின் புதன் பொது மறையுரை
›  திருத்தந்தையின் புதன் பொது மறையுரை - திருஅவை ஓர் அன்னை
›  ஜூன் 11, புதன் பொது மறையுரை
›  மே 28 – புதன் பொது மறையுரை
›  மே 14 புதன் பொது மறையுரை
›  மே 07 – புதன் பொது மறையுரை
›  ஏப்ரல்,30 – புதன் பொது மறையுரை
›  ஏப்ரல்,23 – புதன் பொது மறையுரை
›  ஏப்ரல்,16புதன் பொது மறையுரை
›  ஏப்ரல்,09 – புதன் பொது மறையுரை
அறிந்து கொள்வோம் 


ஜூலை,19,2014. இந்தியாவில் 21 இலட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஐ.நா. அறிக்கை ஒன்று அறிவித்துள்ளது.
ஐ.நா. வின் எய்ட்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிய மற்றும் பசிபிக் பகுதியில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 10 பேரில் 4 பேர் ...»


ஜூலை,19,2014. இந்தியாவில் மூன்றில் ஒருவர் இளையோர், ஐந்தில் ஒருவர் வளர்இளம் பருவத்தினர் என ஐ.நா. மக்கள் தொகை அமைப்பின் ஆய்வறிக்கை கூறுகின்றது.
இந்தியாவில் 10 முதல் 19 வயதுடையவர்களின் எண்ணிக்கை 25 கோடியே 30 இலட்சமாகவும், 15 முதல் 24 வயதுடையோரின் ...»


ஜூலை,17,2014. 94 குழந்தைகளை பலி கொண்ட கும்பகோணம் பள்ளித் தீ விபத்தின் 10-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி குழந்தைகளை இழந்த பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அந்தப் பள்ளியின் முன் புதன்கிழமை கூடி அஞ்சலி செலுத்தினர்.
கும்பகோணம் காசிராமன் தெருவில் மிகச் சிறிய ...»


ஜூலை,16,2014. பிரான்சில் முதலாம் உலகப் போரின் நூற்றாண்டு நிறைவு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ளது. 1914ம் ஆண்டில் தொடங்கிய முதல் உலகப் போரில் 76 நாடுகள் பங்கேற்று மோதிக் கொண்டது வரலாற்றில் இடம்பிடித்த ஒரு முக்கிய விடயமாகும்.
முதல் உலகப் போரில் ...»


ஜூலை 15,2014. உலகில் தொற்றுநோய்க் கட்டுப்பாட்டுக்கு பயன்படும் ‘ஆண்டிபயாடிக்’ மருந்துக்களின் பயன்பாடு அதிகரித்து வருவதாகவும், இதனால் மக்களின் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும் அண்மைகால ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
2000க்கும் ...»
விசுவாச ஆண்டு:அக்.11,2012-நவ.24,2013 ரியோ உலக இளையோர் தினம் 2013

நாங்கள் யார் நிகழ்ச்சிகள் நேரம் வானொலி மையத்திற்கு எழுது வத்திக்கான் வானொலியின் தயாரிப்புகள் இணைப்புகள் பிற மொழிகள் தி௫ப்பீடம் வத்திக்கான் நகரம் தி௫த்தந்தை நிகழ்த்தும் தி௫வழிபாடுகள்
இவ்விணையத்தில் உள்ள அனைத்தும் உரிமம் பெற்றவை ©. இணைய ஒருங்கிணைப்பாளர் / இணைய அமைப்பாளர்கள் / சட்ட விதிமுறை / விளம்பரம்