2015-05-23 15:58:00

2 இலட்சம் கடல்வாழ் நுண்ணுயிரி வகைகள் கண்டுபிடிப்பு


மே,23,2015. கடலில் மிதந்து கொண்டிருக்கும், மிகவும் சிறிய நுண்ணுயிரியான, plankton பற்றி இதுவரை இல்லாத வகையில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய ஆய்வில் இரண்டு இலட்சம் வகையான, வித்தியாசமான உயிரியினங்களை இனங்கண்டுள்ளதாகவும் அவற்றில் ஏராளமானவை அறிவியல் துறைக்கு புதிதானவை என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த உயிரினங்களின் மரபணுத் தொடரை வரிசைப்படுத்தும்போது அவற்றில் வைரஸ்,  ஒருகலத் தாவரம், பாக்டீரியா மற்றும் நுண்ணுயிரி ஆகியவற்றுடன் இலட்சக்கணக்கிலான புதிய மரபணுக்களும் கண்டறியப்பட்டுள்ளன.

இவை குறித்த கட்டுரையை Journal  Science எனும் அறிவியல் இதழில் ஆய்வாளர்கள் எழுதியுள்ளனர்.

கடல் வாழ் உயிரினங்களில் 90 விழுக்காடுகளாக காணப்படும் planktonகள் குறித்த ஆய்வுகள் மிகக் குறைந்த அளவிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த அறிவியல் இதழில் எழுதியுள்ள ஆய்வாளர்கள் உலகளவில் சுற்றுச்சுழல் பாதுகாப்பு மற்றும் சம நிலைக்கு எந்த அளவுக்கு மழைக்காடுகள் முக்கியமானதோ அதே அளவுக்கு இந்தப் planktonம் முக்கியமானவை என்று கூறியுள்ளனர்.

அதேவேளை இந்த நுண்ணுயிரிகளும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் அபாய நிலையில் இருக்கக் கூடும் எனவும் தெரிவித்துள்ளனர்.

ஆதாரம் : பிபிசி / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.