2015-07-27 16:23:00

கடலில் சேரும் நன்னீர் பருவமழை சுழற்சியைப் பாதிக்கிறது


ஜூலை,27,2015. மழையிலிருந்தும் ஆறுகளிலிருந்தும் கடலுக்கு வந்துசேரும் தண்ணீரின் காரணமாக, இந்தியப் பெருங்கடலில் உருவாகும் நன்னீர்ப் படலம் தெற்காசியாவின் பருவமழை சுழற்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவிலும் அதன் அண்டை நாடுகளிலும் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான பருவமழைக் காலத்தில்தான் 70 விழுக்காடு மழை பெய்கிறது.

ஆனால், நீண்ட காலம் மழையே பெய்யாமல் இருப்பது, குறைந்த காலக்கட்டத்தில் பெரும் மழை பெய்து வெள்ளம் ஏற்படுவது போன்ற நிகழ்வுகள் அண்மைக் காலமாக தெற்காசியப் பகுதியில் அதிகரித்துள்ளன.

இந்த ஆண்டும் ஜூன் மாதத்தில் வழக்கமான அளவைவிட அதிக மழை பெய்திருக்கிறது. ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் எதிர்பார்த்ததைவிட குறைவாகவே பெய்யும் எனவும் கணிக்கப்பட்டிருக்கிறது.

பருவமழை கணிப்பில் வானிலை ஆய்வாளர்கள் தவறுவதற்கு கடலில் இருக்கும் நன்னீரைக் கணக்கில் கொள்ளாதது ஒரு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

இந்தியத் துணைக் கண்டத்தின் முக்கிய நதிகளான கங்கை, யமுனை, பிரம்மபுத்திரா, Irrawaddy போன்ற நதிகள் வங்காள விரிகுடாக் கடலில் கலக்கின்றன.

ஆதாரம் : பிபிசி/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.